கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் முடிந்த நிலையில் பதக்க பட்டியலில் தமிழ்நாடு 2ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளின் 6ஆவது சீசன் கடந்த 19 ஆம் தேதி தொடங்கி தற்போது முடிந்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில், கபடி, ஜூடோ, ஸ்குவாஷ், ஃபென்சிங், பாக்ஷிங் (குத்துச்சண்டை), ஜிம்னாஸ்டிக்ஸ், யோகாசனம், ஹாக்கி, மல்லாகம்ப், கட்கா, கால்பந்து, கூடைப்பந்து, தடகளம், துப்பாக்கிச் சுடுதல் (ரைபிள், பிஸ்டல்), துப்பாக்கிச்சுடுதல் (ஷாட் ஹன்) உள்பட 26 விதமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
தாயார் நலமாக இருக்கிறார் – பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் – விராட் கோலியின் சகோதரர்!
இன்று நீச்சல், டேபிள் டென்னிஸ் மற்றும் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் தான் கேலோ இந்தியா போட்டிகள் இன்றுடன் முடிந்துள்ளது. இதுவரையில் தமிழ்நாடு 38 தங்கம், 20 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என்று மொத்தமாக 97 பதக்கங்கள் கைப்பற்றி பதக்கப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்து சாதானை. கடந்த ஆண்டு நடந்த 5ஆவது சீசனில் தமிழ்நாடு 8ஆவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கேலோ இந்தியா நீச்சல் போட்டியில் தனது தேசிய சாதனையை தானே முறியடித்து தங்கம் வென்ற பாலக் ஜோஷி!
இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழா நடைபெற இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், தயாநிதி மாறன் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்க இருக்கின்றனர். இந்த நிறைவு விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Khelo India: இன்றுடன் முடிவடையும் கேலோ இந்தியா – தமிழ்நாடு 91 பதக்கத்துடன் 3 ஆவது இடத்திற்கு சரிவு!