டோக்கியோ 2020 ஒலிம்பிக் வினாடி வினா..! தினமும் வெற்றி பெற்று இந்திய அணி ஜெர்சியை வெல்ல அரிய வாய்ப்பு

By karthikeyan VFirst Published Jul 15, 2021, 7:57 PM IST
Highlights

டோக்கியோ ஒலிம்பிக் நெருங்கிவிட்ட நிலையில், ஒலிம்பிக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து ஏசியாநெட் நியூஸ் வினாடி வினா போட்டியை நடத்துகிறது. இந்த வினாடி வினாவில் தினமும் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலளித்து இந்திய அணி ஜெர்சியை வெல்லும் அரிய வாய்ப்பை பெறுங்கள்.
 

டோக்கியோவில் வரும் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. ஒலிம்பிக் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், 136 கோடி இந்திய மக்களின் நம்பிக்கையையும் தங்களது தோள்களில் சுமந்துகொண்டு இந்தியாவிற்காக பதக்கங்களை பெறும் முனைப்புடன் 126 விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் கலந்துகொள்கின்றனர். 

இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிக விளையாட்டு வீரர்களை கொண்ட குழுவை டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இந்தியா அனுப்புகிறது. ஒலிம்பிக்கில் முதல்முறையாக வாள்சண்டையில் கலந்துகொள்ள இந்தியாவிலிருந்து பவானி தேவி என்ற வீராங்கனை தேர்வாகியிருக்கிறார்.  அதேபோல, நேத்ரா குமணன் என்ற இந்திய வீராங்கனை முதல் முறையாக இந்தியா சார்பில் ஒலிம்பிக் பனிச்சறுக்கு போட்டியில் கலந்துகொள்கிறார்.

இந்நிலையில், ஒலிம்பிக் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து ஏசியாநெட் நியூஸ், ஒலிம்பிக் வினாடி வினா போட்டிகளை நடத்துகிறது. ஜூலை 22 முதல் இந்த வினாடி வினா போட்டி தொடங்குகிறது.

டோக்கியோ 2020 ஒலிம்பிக்கிற்கான சாலை என்ற பெயரில் நடத்தப்படும் இந்த வினாடி வினா, ஒலிம்பிக் வரலாறு, ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுகள், விதிமுறைகள், ஒழுக்க நெறிகள், விளையாட்டு வீரர்களின் சாதனைகள், உலக சாதனைகள், இந்திய விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல ஒலிம்பிக் குறித்த தகவல்களை தெரியப்படுத்தும் முயற்சியாக அமைந்துள்ளது.

இந்த வினாடி வினா சவாலை எதிர்கொண்டு தினமும் இந்திய அணி ஜெர்சியை வெல்லும் வாய்ப்பை பெறுங்கள். 

உங்களை போலவே உங்கள் நண்பர்களும் இந்த வினாடி வினாவில் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால், அவர்களையும் இதில் கலந்துகொள்ள அழையுங்கள் அல்லது டோக்கியோ 2020 ஒலிம்பிக் வினாடி வினாவிற்கான சாலை பக்கத்தை சமூக வலைதளங்களில் பகிருங்கள்.

எதற்காக காத்திருக்கிறீர்கள்? இங்கே கிளிக் செய்து “டோக்கியோ 2020 ஒலிம்பிக்கிற்கான சாலை வினாடி வினா”வில் கலந்துகொள்ளுங்கள்.
 

click me!