Asian Games 2026: 2வது தங்கத்தை தட்டித் தூக்கிய இந்தியா! துப்பாக்கி சுடுதலில் கமல்ஜீத் - சுருசி சாதனை!

Published : Sep 25, 2026, 11:07 AM IST
Suruchi Singh and Kamaljeet

சுருக்கம்

Asian Games 2026: ஆசிய விளையாட்டுப் போட்டியில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் சுருச்சி சிங் - கமல்ஜீத் ஜோடி ஆசிய சாதனையுடன் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. செப்டம்பர் 25-ம் தேதியான இன்று, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சுருச்சி சிங் மற்றும் கமல்ஜீத் ஜோடி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இத்தொடரில் இந்தியாவுக்குக் கிடைத்த இரண்டாவது தங்கம் இதுவாகும்.

இந்தியாவுக்கு 2வது தங்கம்

இந்தப் பைனலில் இந்திய ஜோடி மொத்தம் 484.6 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. 478.0 புள்ளிகள் எடுத்த தென் கொரியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. ஈரான் அணி 415.8 புள்ளிகளுடன் வெண்கலம் வெல்ல, 349.4 புள்ளிகள் எடுத்த இந்தோனேசியா போட்டியிலிருந்து வெளியேறியது.

சுருச்சி - கமல்ஜீத் ஜோடி தங்கம் வென்றதுடன் மட்டுமல்லாமல், ஒரு புதிய ஆசிய சாதனையைப் படைத்துள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் புதுடெல்லியில் நடந்த ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணி 481.3 புள்ளிகள் எடுத்ததே சாதனையாக இருந்தது. இப்போது அந்த சாதனையை நமது இந்திய ஜோடி முறியடித்துள்ளனர்.

'ஜப்பானுக்கு இதுக்கா போனீங்க'.. பும்ராவை கலாய்த்து தள்ளிய மனைவி சஞ்சனா.. என்ன நடந்தது?

சுருச்சி - கமல்ஜீத் ஜோடி சாதனை

இறுதிப்போட்டியின் தொடக்கத்திலிருந்தே சுருச்சி - கமல்ஜீத் ஜோடி ஆதிக்கம் செலுத்தினர். முதல் சீரிஸில் 103 புள்ளிகள் பெற்று முன்னிலை பிடித்தனர். தென் கொரியா 98.1, ஈரான் 98.0, இந்தோனேசியா 95.2 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் இருந்தன. இரண்டாவது சீரிஸில் இந்திய ஜோடி 99.4 புள்ளிகள் சேர்க்க, மொத்த ஸ்கோர் 202.4 ஆனது. தென் கொரியா 103.1 புள்ளிகள் எடுத்து 201.2 என நெருங்கி வந்தது.

மூன்றாவது சீரிஸில் இந்தியா 101.1 புள்ளிகள் எடுத்து 303.5 என முன்னிலையை அதிகப்படுத்தியது. தென் கொரியா 300.2, ஈரான் 295.0, இந்தோனேசியா 291.0 புள்ளிகளை எடுத்திருந்தன. ஸ்டேஜ் 2-விலும் இந்திய ஜோடி கெத்து காட்டினர். முதல் சீரிஸில் 61.2 புள்ளிகள் எடுத்து 364.7 என ஸ்கோரை உயர்த்தினர். தென் கொரியாவை விட 5.8 புள்ளிகள் முன்னிலையில் இருந்தனர். 349.4 புள்ளிகள் எடுத்த இந்தோனேசியா வெளியேறியது.

ஸ்டேஜ் 2-ன் இரண்டாவது சீரிஸில் இந்திய ஜோடி 424.9 புள்ளிகள் பெற்று, தென் கொரியாவை (416.5) விட 8.4 புள்ளிகள் முன்னிலை பிடித்தது. ஈரான் 415.8 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றது. கடைசி சீரிஸில் தென் கொரியா கடுமையாகப் போராடின. ஆனாலும், சுருச்சி - கமல்ஜீத் ஜோடி 484.6 புள்ளிகள் பெற்று, தென் கொரியாவை விட 6.6 புள்ளிகள் வித்தியாசத்தில் தங்கம் வென்றனர். உலக சாதனையை முறியடிக்க இவர்களுக்கு வெறும் 4 புள்ளிகளே குறைந்தன.

Ajit Agarkar: ரோகித் சர்மாவுடன் மோதல்?.. இனி இந்த பதவி வேண்டாம்.. அஜித் அகர்கர் முடிவின் பின்னணி!

இந்தியாவுக்கு இதுவரை எத்தனை பதக்கங்கள்?

இத்தொடரில் இந்தியாவுக்குக் கிடைத்த இரண்டாவது தங்கம் இதுவாகும். முன்னதாக, மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்றிருந்தது. 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 2 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ் போட்டிகளிலும் இந்தியாவுக்கு நல்ல முடிவுகள் கிடைத்துள்ளன. ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் அணிகள் பிரிவில் ஏபிஎஸ் தோமர், ருத்ராங்க்ஷ் பாட்டீல், நீரஜ் குமார் ஜோடி வெள்ளி வென்றுள்ளனர். தோமர் மற்றும் நீரஜ் தனிநபர் இறுதிப்போட்டியிலும் விளையாட இருக்கின்றனர்.

டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் காலிறுதியில் தியா சிதாலே - மானுஷ் ஷா ஜோடி, ஹாங்காங்கின் வோங் சுன் டிங் - டூ ஹோய் கெம் ஜோடியை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்துள்ளனர். ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் காலிறுதியில் ஜோஷ்னா சின்னப்பா - வேலவன் செந்தில்குமார் ஜோடி, பிலிப்பைன்ஸின் டேவிட் பெலினோ - ஜெம்சியா அரிபாடோ ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Ajit Agarkar: ரோகித் சர்மாவுடன் மோதல்?.. இனி இந்த பதவி வேண்டாம்.. அஜித் அகர்கர் முடிவின் பின்னணி!
'ஜப்பானுக்கு இதுக்கா போனீங்க'.. பும்ராவை கலாய்த்து தள்ளிய மனைவி சஞ்சனா.. என்ன நடந்தது?