Asian Games 2026: ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை!

Published : Sep 22, 2026, 01:46 PM IST
Asian Games 2026

சுருக்கம்

Asian Games 2026: ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி 147 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி முதல் தங்கத்தை வென்றுள்ளது. 216 ரன்கள் குவித்த இந்தியா, இலங்கையை 69 ரன்களுக்கு சுருட்டி சாதனை படைத்தது.

ஜப்பான் நாட்டின் நிஷின் நகரில் உள்ள கோரோகி ஸ்போர்ட்ஸ் பார்க்கில் செப்டம்பர் 22, செவ்வாய்க்கிழமை ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி நடந்தது. இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இலங்கையை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய இலங்கை அணி, இந்திய வீராங்கனைகளின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 15.4 ஓவர்களில் வெறும் 69 ரன்களுக்கு சுருண்டது. தீப்தி சர்மா (3/6), ஷஃபாலி வர்மா (2/3), ஷ்ரேயங்கா பாட்டீல் (2/9), ஸ்ரீ சரணி (2/13) ஆகியோர் தங்களது அபாரமான பந்துவீச்சால் இலங்கை அணியை நிலைகுலையச் செய்தனர். கடந்த 2023 ஆம் ஆண்டும் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணிதான் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து இரண்டு முறை தங்கம் வென்று, தங்களது சாம்பியன் பட்டத்தை தக்கவைத்த முதல் மகளிர் கிரிக்கெட் அணி என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியா படைத்துள்ளது. அதுமட்டுமின்றி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்து, ஆசிய விளையாட்டு வரலாற்றிலேயே புதிய சாதனையை இந்திய மகளிர் அணி பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: சிக்ஸர் மழை பொழிந்த இந்திய மகளிர் அணி.. ஆசிய விளையாட்டில் புதிய சாதனை ஸ்கோர்!
Vijay - Ajith: முதல்வர் விஜய்க்கு அஜித் எழுதிய கடிதம்.. ஒரே பாராட்டு மழை! அப்படி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?