Asian Games 2026: ஷஃபாலி வர்மா மின்னல் வேக சதம்! வங்கதேசத்தை பந்தாடி பைனலுக்கு சென்ற இந்தியா!

Published : Sep 20, 2026, 03:10 PM IST
Asian Games 2026

சுருக்கம்

Asian Games 2026: ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் பிரிவில் வங்கதேச மகளிர் அணியை 114 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி கெத்தாக பைனலுக்கு சென்றுள்ளது.

ஜப்பானில் நடைபெறும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் அரையிறுதியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது. இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் வங்கதேச அணியை 114 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தங்கப் பதக்கத்துக்கான இறுதிப்போட்டிக்கு இந்திய அணி கெத்தாக முன்னேறியுள்ளது. 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, இந்திய பவுலர்களின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.4 ஓவர்களில் வெறும் 81 ரன்களுக்கு சுருண்டது.

ஷஃபாலி வர்மா மின்னல் வேக சதம்

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்களைக் குவித்தது. ஓப்பனிங் பேட்டர் ஷஃபாலி வர்மா தனது முதல் டி20 சர்வதேச சதத்தை விளாசி அசத்தினார். மைதானத்தின் பவுண்டரிகள் சிறியதாக இருந்ததை பயன்படுத்திக் கொண்ட ஷஃபாலி வர்மா சிக்சர் மழை பொழிந்தார். வெறும் 49 பந்தில் 9 சிக்சர்கள், 3 பவுண்டரியுடன் சதம் விளாசிய ஷஃபாலி வர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்மிருதி மந்தனா (37) மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (40) ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை அளித்து, அணி பெரிய ஸ்கோரை எட்ட உதவினர்.

Abhishek Sharma: ஆத்தாடி! என்னா அடி! சிக்சர் மழை.. வெறும் 30 பந்தில் சதம்.. அபிஷேக் சர்மா உலக சாதனை!

வங்கதேச அணி தடுமாற்றம்

சேஸிங்கை தொடங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. 2-வது ஓவரின் முதல் பந்திலேயே ஓப்பனிங் பேட்டர் ஜுவைரியா ஃபெர்தோஸை டக் அவுட் ஆக்கினார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் நந்தினி சர்மா. அதன்பிறகு விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 3-வது ஓவரின் 3-வது பந்தில் வேகப்பந்து வீச்சாளர் கிராந்தி கவுட், சோபனா மோஸ்தரியை 4 ரன்களில் வெளியேற்றினார்.

இந்திய வீராங்கனைகள் பவுலிங்கில் கலக்கல்

5 ஓவர்கள் முடிவில் 34/2 என இருந்த வங்கதேச அணிக்கு, லெக் ஸ்பின்னர் ஸ்ரீ சரணி அடுத்த அடியைக் கொடுத்தார். 6-வது ஓவரின் 3-வது பந்தில் நிகர் சுல்தானாவை 9 ரன்களில் அவர் பெவிலியனுக்கு அனுப்பினார். அடுத்த ஓவரிலேயே ஸ்பின்னர் ஷ்ரேயங்கா பாட்டீல், ஷோர்னா அக்டரை 5 ரன்களில் அவுட் ஆக்கினார். 10-வது ஓவரின் 2-வது பந்தில் ஆஃப் ஸ்பின்னர் தீப்தி சர்மா, திலாரா அக்டரை 27 ரன்களில் வீழ்த்தினார். 11-வது ஓவரில் நந்தினி சர்மா மீண்டும் மிரட்டினார். நஹிதா அக்டரை 4 ரன்களிலும், ரபேயா கானை டக் அவுட்டிலும் அடுத்தடுத்து வீழ்த்தி வங்கதேசத்தின் பேட்டிங் முதுகெலும்பை உடைத்தார்.

Trophy Controversy: துபாயில் உச்சக்கட்ட டிராமா.. கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி!

தங்கம் வெல்லுமா இந்தியா?

கடைசியாக 16-வது ஓவரில் மருஃபா அக்டர் (5), ஷஞ்சிதா அக்டர் மேக்லா (0) ஆகிய இருவரையும் தீப்தி சர்மா வீழ்த்தினார். முடிவில் 15.4 ஓவர்களில் 81 ரன்களுக்கு வங்கதேசம் ஆல் அவுட் ஆனது. இந்திய பவுலிங்கில் தீப்தி சர்மா (3/7), நந்தினி சர்மா (3/25) இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்தை நிலைகுலையச் செய்தனர்.

இந்த 114 ரன்கள் மெகா வெற்றியின் மூலம், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. தங்கப் பதக்கத்துக்கான ஃபைனலில் இலங்கை அணியை இந்தியா எதிர்கொள்கிறது. கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்திய அணி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: வெறும் 5 ஓவரில் ஜப்பானை ஊதித்தள்ளிய இந்திய மகளிர் அணி.. செமி பைனலுக்கு என்ட்ரி!
Abhishek Sharma: ஆத்தாடி! என்னா அடி! சிக்சர் மழை.. வெறும் 30 பந்தில் சதம்.. அபிஷேக் சர்மா உலக சாதனை!