
ஜப்பானில் நடந்து வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் ஹாக்கி அணி தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது. இன்று நடந்த 'பூல் பி' (Pool B) பிரிவின் இரண்டாவது லீக் ஆட்டத்தில், இந்தோனேசியாவை 17-1 என்ற கோல் கணக்கில் இந்தியா துவம்சம் செய்தது. இந்த மேட்ச்சில் தீபிகா ஷெராவத், ருதுஜா பிசல் இருவரும் பட்டையை கிளப்பிவிட்டனர்.
முதல் போட்டியில் உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக 19-0 என இந்தியா ஜெயித்தபோது, தீபிகா மட்டும் 8 கோல்கள் அடித்து ரெக்கார்டு பிரேக் செய்திருந்தார். அதே ஃபார்மில் இந்த மேட்ச்சிலும் அவரும் ருதுஜாவும் தலா 3 கோல்கள் அடித்தனர். இவர்களைத் தவிர சுனேலிதா டோப்போ, கேப்டன் சலிமா டெட்டே, சாக்ஷி ராணா ஆகியோரும் கோல் அடித்து அசத்தினார்கள்.
Abhishek Sharma: ஆத்தாடி! என்னா அடி! சிக்சர் மழை.. வெறும் 30 பந்தில் சதம்.. அபிஷேக் சர்மா உலக சாதனை!
முன்னதாக, இன்றைய ஆட்டத்தின் 8-வது நிமிடத்திலேயே தீபிகா ஒரு சூப்பரான டிராக்-ஃப்ளிக் மூலம் பெனால்டி கார்னரை கோலாக மாற்றி வேட்டையை ஆரம்பித்தார். அடுத்த 7 நிமிடங்களில் கோல் மழைதான். சுனேலிதா டோப்போ (11-வது நிமிடம்), லால்ரெம்சியாமி (13-வது நிமிடம்), ருதுஜா பிசல் (15-வது நிமிடம்) என அடுத்தடுத்து கோல் அடிக்க, முதல் குவாட்டர் முடிவில் இந்தியா 4-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது குவாட்டரையும் லால்ரெம்சியாமி அதிரடியாக ஆரம்பித்தார். 16-வது நிமிடத்தில் கோல்கீப்பர் தடுத்த ஒரு லாங் பாஸ் பந்தை, இந்திய ஃபார்வர்டு வீராங்கனைகள் லாவகமாகப் பிடித்தனர். அந்த பந்தை வாங்கிய லால்ரெம்சியாமி ஒரு ரிவர்ஸ் ஹிட் மூலம் தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார்.
இந்தோனேசியா ஒரே ஒரு கோல்
20-வது நிமிடத்தில் நேஹா பந்தை எடுத்துக்கொண்டு சர்க்கிளுக்குள் நுழைந்து ருதுஜாவுக்கு பாஸ் செய்ய, அதை அவர் எந்த தப்பும் இல்லாமல் கோலாக்கினார். இதனால் ஸ்கோர் 6-0 என உயர்ந்தது. 25-வது நிமிடத்தில் சாக்ஷி ராணாவும் தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து 28-வது நிமிடத்தில் தீபிகாவும், 30-வது நிமிடத்தில் சுனேலிதாவும் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக மாற்றினார்கள். முதல் பாதி ஆட்ட நேர முடிவில் இந்தியா 9-0 என இந்தோனேசியாவை முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது.
முதல் பாதியில் இந்தியா 55 சதவீத பந்து கட்டுப்பாட்டை வைத்திருந்தது. இந்தோனேசியாவுக்கு வெறும் 2 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் மட்டுமே கிடைத்த நிலையில், இந்தியாவுக்கு 9 வாய்ப்புகள் கிடைத்தன. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும், 32-வது நிமிடத்தில் இந்தோனேசியாவின் இன்னெஸ் ஆதியிதா ஒரு கோல் அடித்தார். ஆனால், இந்திய வீராங்கனைகள் விடுவதாக இல்லை.
கெத்தாக பயணத்தை தொடங்கிய இந்திய அணி
கேப்டன் சலிமா டெட்டே (34-வது நிமிடம்), நவ்நீத் (35-வது நிமிடம்), இஷிகா (36-வது நிமிடம்), ருதுஜா (39-வது நிமிடம்), தீபிகா (40-வது நிமிடம்) என அடுத்தடுத்து கோல் மழை பொழிய, ஸ்கோர் 14-1 என எகிறியது. கடைசி கட்டத்தில் நவ்நீத் (56 மற்றும் 57-வது நிமிடம்) மற்றும் சாக்ஷி ராணா (57-வது நிமிடம்) மேலும் கோல்களை குவித்து இந்திய அணிக்கு பிரம்மாண்ட வெற்றியைத் தேடித் தந்தனர். 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் முதல் ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானை 19-0 என வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி தனது பயணத்தை கெத்தாகத் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.