மாநில கால்பந்து போட்டி; திருச்சி ஜமால் முகமது கல்லூரி சாம்பியன்…

Asianet News Tamil  
Published : Feb 24, 2017, 11:49 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
மாநில கால்பந்து போட்டி; திருச்சி ஜமால் முகமது கல்லூரி சாம்பியன்…

சுருக்கம்

திருச்சி தூய வளனார் கல்லூரியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா மாநில கால்பந்து போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணி சாம்பியன் வென்றது.

கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய மாநில கால்பந்து போட்டியில் திருச்சி, கோவை, திருநெல்வேலி, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 11 கல்லூரிகள் பங்கேற்றன.

நாக் அவுட் முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியின் இறுதியாட்டத்தில் விளையாட திருச்சி ஜமால் முகமது கல்லூரி, தூய வளனார் கல்லூரி அணிகள் தகுதி பெற்றன.

புதன்கிழமை மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் டைபிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்தன. இதையடுத்து சடன்டெத் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஜமால் முகமது கல்லூரி 5-4 என்ற கோல் கணக்கில் தூய வளனார் கல்லூரி அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், தூய வளனார் கல்லூரி விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் எஸ். அருள்தாஸ் கலந்து கொண்டு ஜமால் முகமது கல்லூரி அணிக்கு கோப்பையை வழங்கினார்.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

TNPL 2026 Match 17: ஷ்யாம் சுந்தரின் அதிரடி சதம்! திருச்சியிடம் வீழ்ந்த திருப்பூர்!
TNPL: கோவையை கடைசி பந்துவரை மிரட்டிய நெல்லை..! ரித்திக் ஈஸ்வரனின் அதிரடியால் த்ரில் வெற்றி