இலங்கையை தோற்கடித்து ஆஸ்திரேலியா; ஆனால், வென்றது இலங்கைதான். எப்படி?

Asianet News Tamil  
Published : Feb 23, 2017, 12:21 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
இலங்கையை தோற்கடித்து ஆஸ்திரேலியா; ஆனால், வென்றது இலங்கைதான். எப்படி?

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் ஆட்டத்தில் 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆனால், முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிப் பெற்றதால், இலங்கையே தொடரைக் கைபெற்றி வென்றது.

முதல் இரு ஆட்டங்களில் தோற்று தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் ஆறுதல் தேடிக்கொண்டது.

அடிலெய்டில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்கள் குவித்தது.

அந்த அணியில் மைக்கேல் கிளிங்கர் 43 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 62, ஆரோன் ஃபிஞ்ச் 32 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 53, டிராவிஸ் ஹெட் 16 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 30 ஓட்டங்கள் எடுத்தனர்.

இலங்கைத் தரப்பில் மலிங்கா, ஷனகா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இலங்கை அணி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18 ஓவர்களில் 146 ஓட்டங்களுக்ச்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக முனவீரா 37, சிறிவர்த்தனா 35 ஓட்டங்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலியத் தரப்பில் ஜேம்ஸ் ஃபாக்னர், ஆடம் ஸம்பா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

ஆடம் ஸம்பா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். குணரத்னே தொடர் நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

முதல் இரு போட்டிகளில் வென்றதன் அடிப்படையில் இலங்கை 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IPL பைனல் பெங்களூருவில் நடக்காது.... பிளே ஆஃப் அட்டவணையில் பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்
Dhoni's Future: தோனி 2026 IPL-ல் விளையாடுவது கஷ்டம்; CSK சொதப்பினால் மட்டுமே வாய்ப்பு - அஷ்வின்