
சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீரர் சமீர் வர்மா 11 இடங்கள் முன்னேறி 23-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற சையது மோடி கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சமீர் வர்மா, இப்போது தரவரிசையிலும் அதிரடியாக முன்னேற்றம் கண்டுள்ளார்.
ஆடவர் ஒற்றையர் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்திய வீரர்களில் அஜய் ஜெயராம் அதிகபட்சமாக 19-ஆவது இடத்தில் உள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக எச்.எஸ்.பிரணாய் 21-ஆவது இடத்தில் இருக்கிறார்.
மகளிர் ஒற்றையர் தரவரிசையில் இந்தியாவின் சாய்னா நெவால் ஓர் இடத்தை இழந்து 10-ஆவது இடத்தில் உள்ளார்.
பி.வி.சிந்து தொடர்ந்து 5-ஆவது இடத்தில் இருக்கிறார்.
கலப்பு இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் பிரணவ் சோப்ரா - சிக்கி ரெட்டி ஜோடி 13-ஆவது இடத்தில் உள்ளனர்.
ஆடவர் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் மானு அத்ரி - சுமீத் ரெட்டி ஜோடி 23-ஆவது இடத்தில் உள்ளன.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.