பெண் கொடுத்த பாலியல் வன்கொடுமை புகார்... பிரபல கிரிக்கெட் வீரரை அதிரடியாக கைது செய்தது சிட்னி போலீஸ்

Published : Nov 06, 2022, 07:39 AM ISTUpdated : Nov 06, 2022, 07:45 AM IST
பெண் கொடுத்த பாலியல் வன்கொடுமை புகார்... பிரபல கிரிக்கெட் வீரரை அதிரடியாக கைது செய்தது சிட்னி போலீஸ்

சுருக்கம்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒருபுறம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க, மறுபுறம் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கி கைதாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் தொடங்கிய இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதில் குரூப் 1-ல் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அதேபோல் குரூப் 2-வில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளில் எந்த இரு அணிகள் அரையிறுதிக்கு தேர்வாகும் என்பது இன்றைய போட்டி முடிவுகளின் மூலம் தெரியவரும்.

இவ்வாறு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒருபுறம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க, மறுபுறம் இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கி ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான தனுஷ்கா குணதிலகா தான் தற்போது பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கி சிட்னி போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்...  டி20 உலக கோப்பை: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து.! தொடரைவிட்டு வெளியேறியது ஆஸ்திரேலியா

இவர் காயம் காரணமாக டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணியில் இருந்து நீக்கப்பட்ட போதும், அவரை சொந்த நாட்டுக்கு அனுப்பாமல் வைத்திருந்தனர். இந்த நிலையில் தான் அவர் மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் சிட்னி போலீசார் கைது செய்துள்ளனர். சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறிய இலங்கை அணி இன்று நாடு திரும்பியது. தனுஷ்க குணதிலகாவை போலீஸ் கைது செய்ததால் அவரை தவிர மற்ற வீரர்கள் நாடு திரும்பினர்.

இலங்கை வீரர் தனுஷ்க குணதிலகா பாலியல் புகாரில் சிக்குவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னர் கடந்த 2018-ம் ஆண்டு நார்வே பெண் ஒருவர் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரிலும் சிக்கினார். ஆனால் அப்போது அவரது நண்பரையும், அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இறுதியில் தனுஷ்க குணதிலகாவிற்கு அதில் தொடர்பு இல்லை என விடுவிக்கப்பட்டு, அவரது நண்பரை மட்டும் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... டி20 உலக கோப்பை: இந்திய அணியின் பெரிய பிரச்னை இதுதான்.. உடனே அவரை அணியில் ஆடவைங்க..! அலர்ட் செய்யும் கம்பீர்

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Rahul Gandhi with Messi: மெஸ்ஸியுடன் கூலாக உரையாடிய ராகுல் காந்தி.. ரசிகர்கள் ஆரவாரம்..
Lionel Messi: ஹைதராபாத்தில் மெஸ்ஸி மேஜிக்.. முதல்வர் ரேவந்த் உடன் 2 கோல்கள்!