ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியின் போது மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இணைந்து மரக்கன்று நட்டு வைத்தனர்.
இந்தியா மற்றும் மலேசியா அணிகளுக்கு இடையிலான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டி சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் தற்போது நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் மலேசியா அணிகள் மோதுகின்றன. இதில், சிறப்பு விருந்தினர்களாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்று நட்டு வைத்தனர்.
நடப்பு சாம்பியன் கொரியாவை தோற்கடித்து 3ஆவது இடம் பிடித்த ஜப்பானுக்கு வெண்கலப் பதக்கம்!
அதுமட்டுமின்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்துள்ளார். மேலும், இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தும் இந்த இறுதிப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இதற்கு முன்னதாக மாலை 6 மணிக்கு நடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் தென் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. இதில், ஜப்பான் 5-3 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி 3ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.
தொடரை கைப்பற்ற 3 மாற்றங்களுடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் – சமன் செய்யுமா இந்தியா?