Sports Budget 2023-24: விளையாட்டுத் துறையை விசேஷமாக கவனித்த மத்திய பட்ஜெட்! எத்தனை அறிவிப்புகள் பாருங்க!

By SG Balan  |  First Published Feb 1, 2023, 5:20 PM IST

இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள், பாரிஸ் ஓலிம்பிக் போட்டிகள் போன்ற முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.


2023-24ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு கடந்த ஆண்டைவிட அதிகமாக ரூ.3397 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள், பாரிஸ் ஓலிம்பிக் போட்டிகள் போன்ற முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

இதன்படி 2023-24ஆம் ஆண்டுக்காக விளையாட்டுத்துறைக்கு 3,397.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இது சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைவிட ரூ.723.97 கோடி அதிகம் ஆகும்.

Union Budget 2023-24: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் என்ன சலுகை?

சென்ற நிதியாண்டில் முதலில் அறிவிக்கப்பட்ட 3,062.60 கோடி ரூபாய் நிதி பின்னர் 2,673.35 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது. சீனாவில் சென்ற ஆண்டில் நடைபெற இருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டதே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளது. இதற்காக விளையாட்டுத் துறைக்கு சென்ற ஆண்டைவிட சுமார் 25 சதவீதம் கூடுதலாக நிதி கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டின் திருத்தப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீட்டில் விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும் கேலோ இந்தியா திட்டத்திற்கான நிதி ரூ.606 கோடி என அறிவிக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில் இது ரூ.1,045 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல விளையாட்டு ஆணையத்திற்காக 785.52 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவும் சென்ற ஆண்டு அளிக்கப்பட்ட 749.43 கோடி ரூபாயைவிட அதிகம்.

தேசிய விளையாட்டு கூட்டமைப்புக்கு ரூ.325 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்டதைவிட ரூ.45 கோடி அதிகம். இதேபோல தேசிய ஊக்கமருத்து தடுப்பு நிறுவனத்துக்கு ரூ.21.73 கோடியும் தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகத்துக்கு ரூ.19.50 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டு ஆராய்ச்சி மையத்துக்கு ரூ.13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Union Budget 2023-24 on Science: ChatGPT எதிரொலி! செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையம் அமைக்க பட்ஜெட்டில் அறிவிப்பு

click me!