
சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் மீண்டும் முதலிடத்துக்கு வந்து அசத்தியுள்ளா.
முன்னதாக முதல் இடத்திலிருந்த ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் மியாமி ஓபனில் தோல்வி கண்டு வெளியேறியதை அடுத்து ஓரிடம் சறுக்கி 2-வது இடத்தில் உள்ளார்.
மியாமி ஓபனில் பட்டம் வென்ற ஜான் இஸ்னர் 9-வது இடத்துக்கு 2-வது முறையாக முன்னேறியுள்ளார். இது அவரது டென்னிஸ் தரவரிசையில் அதிகபட்சமாகும்.
இஸ்னரிடம் தோற்ற அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். காலிறுதி வரை வந்த தென் கொரியாவின் ஹியோன் சங், முதல் முறையாக 19-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
மகளிர் தரவரிசையில் மியாமி ஓபன் மகளிர் பிரிவில் சாம்பியனான அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், முதல் முறையாக 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ருமேனியாவின் சைமோனா ஹேலப் முதலிடத்தில் தொடர, செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவா 10-வது இடத்திலும், ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் 11-வது இடத்திலும், ரஷியாவின் டரியா கசாட்கினா 12-வது இடத்திலும் வந்துள்ளனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.