மியாமி ஓபன் டென்னிஸ்: முதல் பட்டம் வென்றார் அமெரிக்காவின் ஜான் இஸ்னர்...

First Published Apr 3, 2018, 10:47 AM IST
Highlights
Miami Open Tennis First Graduation won by John Isner of America


மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் ஜான் இஸ்னர் வாகை சூடினார். 

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலகின் 4-ஆம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவை எதிர்கொண்டார் போட்டித் தரவரிசையில் 14-வது இடத்தில் இருந்த இஸ்னர்.

இந்த ஆட்டத்தின் முடிவில் இஸ்னர் 6-7(4/7), 6-4, 6-4 என்ற செட்களில் வெற்றி பெற்றார். இது அவரது முதல் ஏடிபி மாஸ்டர்ஸ் பட்டமாகும்.

இது மியாமி ஓபனில் இஸ்னரின் முதல் பட்டமாகும். அதேவேளையில், ஒட்டுமொத்தமாக இது அவரது 19-வது பட்டம்.

வெற்றிக்குப் பிறகு பேசிய இஸ்னர், "இந்தப் பட்டத்தை கைப்பற்றுவேன் என எதிர்பார்க்கவில்லை. அருமையாக ஆடத் தொடங்கும்போது கிடைக்கும் நம்பிக்கை நம்மை தானாகவே முன்னோக்கிச் செலுத்தும். 

இனிவரும் போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியை நோக்கி முன்னேறுவது என் கைகளிலேயே உள்ளது. நெருக்கடிகளை கருத்தில் கொள்ளாமல் இயல்பாக விளையாடும் பட்சத்தில், நான் ஆற்றலுடன் விளையாடுகிறேன்" என்று அவர் கூறினார்.

tags
click me!