முதல் முறையாக பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
கடந்த மாதம் 20 ஆம் தேதி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் 32 அணிகள் கலந்து கொண்ட 9ஆவது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்தது. பிரிஸ்பேன் நேற்று நடந்த 3ஆவது இடத்துக்கான போட்டியில் ஸ்வீடன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4ஆவது முறையாக வெண்கலப் பதக்கத்தை பெற்றது.
இதையடுத்து, ஆஸ்திரேலியாவில் சிட்னியில் நடந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. இதுவரையில் நடந்த 32 ஆண்டு கால பெண்கள் உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு வராத இரு அணிகளும் இந்த முறை இறுதிப் போட்டியில் மோதின.
இன்று நடந்த இறுதிப் போட்டியில் 29ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீராங்கனை கார்மோனா முதல் கோல் அடிக்க முதல் பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து நடந்த 2ஆவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளுமே கோல் அடிக்கவே கடுமையாக போராடின.
செலக்ஷன் கமிட்டி மீட்டிங்கில் கலந்து கொள்ளும் ரோகித் சர்மா: ஆசிய கோப்பைக்கு யார் யாருக்கு வாய்ப்பு?
இறுதியாக ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இதன் மூலம் ஸ்பெயின் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்று புதிய சாதனையும் படைத்துள்ளது.