
ஸ்பெயின் - சுவிட்சர்லாந்து இடையே நடைபெற்ற நட்பு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் பல்வேறு அணிகள் நட்பு ஆட்டங்களில் விளையாடி வருகின்றன.
அதன்படி, வில்லாரியல் நகரில் நடந்த நட்பு ஆட்டத்தில் 2010 சாம்பியன் ஸ்பெயின் அணியும், சுவிட்சர்லாந்து அணியும் நேற்று மோதின.
ஆட்டம் தொடங்கியவுடன் ஸ்பெயினின் அல்வரோ ஓரிசோலா முதல் கோலை அடித்தார். சுவிட்சர் லாந்தின் ஸ்டெபான் லிச்ஸட்யனர் கோல் அடித்ததால் 1-1 என ஆட்டம் சமனில் முடிந்தது.
இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அன்பில்ட் நகரில் பிரேசில் - குரோஷியா அணிகள் இடையே நட்பு ஆட்டம் நடந்தது. இதில், 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வென்றது.
அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் காயம் காரணமாக மூன்று மாதங்கள் விளையாடாத நிலையில் குணமடைந்து மீண்டும் விளையாடிய முதல் ஆட்டம் இது. இதில் அவர் ஒரு கோலடித்து அணி வெற்றிக்கு உதவினார்.
இதன் மூலம் 6-வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் பிரேசில் அணி உள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.