sl vs pak test: கிரிக்கெட்டை மறவோம்! விலைவாசி உயர்வு கிடக்கட்டும்: ஜோரா தொடங்கியது இலங்கை- பாக். முதல் டெஸ்ட்

By Pothy RajFirst Published Jul 16, 2022, 11:47 AM IST
Highlights

இலங்கையில் போராட்டம், அரசியல் நிலையற்ற தன்மை, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகள் ஒருபக்கம் இருந்தாலும் கிரிக்கெட் போட்டி நடக்கத்தான் செய்கிறது.

இலங்கையில் போராட்டம், அரசியல் நிலையற்ற தன்மை, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகள் ஒருபக்கம் இருந்தாலும் கிரிக்கெட் போட்டி நடக்கத்தான் செய்கிறது.

இந்த அனைத்துப் பிரச்சினைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு, கல்லே நகரில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி விளையாடி வருகிறது.

இலங்கையின் பொருளாதாரம் அதளபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கிய அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்குஎதிராக மக்கள் தன்னெழுச்சியாகப் போராடினர். முடிவில் கோத்தபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச இருவரும் பதவியிலிருந்துவிலகியுள்ளனர்.

இலங்கையில் இடைக்கால அதிபரா ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்று வழிநடத்துகிறார். இப்படிப்பட்ட அரசியல் நிலையற்ற தன்மை நிலவும் சூழலிலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் சலனமின்றி நடக்கிறது.
கடந்த வாரம் இலங்கை வந்திருந்த ஆஸ்திரேலிய அணியுடன் கிரிக்கெட் போட்டி நடந்தது. அப்போதுகூட மைதானத்துக்கு வெளியே மக்கள் ஒருபுறம் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகப் போராடிய போது, சலனமின்றி கிரிக்கெட் போட்டிகளும் நடந்தன. 

மக்கள் போராட்டம், அரசியல் நிலையற்ற தன்மை, விண்ணை முட்டும் விலைவாசிஉயர்வு, உணவுப்பொருட்கள், மருந்துப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள்விலை உயர்வு ஒருபக்கம் இருந்தாலும், கிரிக்கெட்டுக்கு யாரும் தடை கோரவில்லை.

கிரிக்கெட்டை ஒரு சாதாரண விளையாட்டாகப் பார்க்கவில்லை. கிரிக்கெட் மூலம் மீண்டும் சுற்றுலாத்துறை தனது இழந்த பெருமையை மீட்கும், சர்வதேச பயணிகள் வருவார்கள், அந்நியச் செலாவணி கிடைக்கும் என்பதால், கிரிக்கெட்டுக்கு எந்த அரசியல்வாதியும், மக்களும் தடை கோரவில்லை.
தேசத்துக்கு நன்மைதரக்கூடிய கிரிக்கெட்டை இலங்கை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆஸ்திரேலியத் தொடர், இப்போது பாகிஸ்தான் தொடர் ஆகியவை மூலம் கணிசமாக 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் இலங்கைக்கு வரும். 

அடுத்ததாக ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரையும்ம் நடத்துவோம் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கையில் முடங்கிக்கிடந்த சுற்றுலாத்துறை ஏற்றம் பெறும், அந்நியச்செலாவணி பெரும், பொருளாதாரச் சிக்கலில் இருந்து மெல்லமெல்ல மீளும் என மக்கள் நம்புகிறார்கள்.

டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. 42ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் சேர்த்துள்ளது சந்திமால்(43)ரன்களுடன் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில்  சாஹின்ஷா அப்ரிடி3 விக்கெட்டுகளையும், யாசிர்ஷா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்

 

 

click me!