ENG vs IND: 3வது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி

Published : Jul 15, 2022, 10:31 PM IST
ENG vs IND: 3வது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.   

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

லண்டன் லார்ட்ஸில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து தொடர் 1-1 என சமனடைந்தது. 

இதையும் படிங்க - கோலி ஃபார்ம் பற்றி கேட்ட நிருபர்.. கடுப்பான ரோஹித்..! வைரல் வீடியோ

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி ஜூலை 17ம் தேதி நடக்கிறது. அந்த கடைசி போட்டியில் ஜெயிக்கும் அணி தான் கோப்பையை வெல்லும். எனவே போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.

இதையும் படிங்க - அந்த ஷாட்டை மொத்தமாவே தடை செய்யணும்..! அஷ்வின் கருத்துக்கு வலுசேர்க்கும் ஸ்காட் ஸ்டைரிஸ்

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட்கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ 3-வது ஓடிஐ.. வேஸ்ட் லக்கேஜ்.. ஆல்ரவுண்டரை நீக்கிய பிசிசிஐ.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
IND VS NZ டி20 தொடரில் இருந்து தமிழக வீரர் விலகல்.. மாற்று வீரர் இவரா?