TNPL 2022: சஞ்சய் யாதவ் காட்டடி சதம்.. பாபா அபரஜித் அதிரடி பேட்டிங்! 20 ஓவரில் 236 ரன்களை குவித்தது நெல்லை அணி

Published : Jul 15, 2022, 09:16 PM IST
TNPL 2022: சஞ்சய் யாதவ் காட்டடி சதம்.. பாபா அபரஜித் அதிரடி பேட்டிங்! 20 ஓவரில் 236 ரன்களை குவித்தது நெல்லை அணி

சுருக்கம்

ரூபி திருச்சி வாரியர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி, சஞ்சய்  யாதவ் மற்றும் பாபா அபரஜித் ஆகிய இருவரின் அபாரமான பேட்டிங்கால் 20 ஓவரில் 236 ரன்களை குவித்து, 237 ரன்கள் என்ற கடின இலக்கை திருச்சி அணிக்கு நிர்ணயித்துள்ளது.  

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸும், ரூபி திருச்சி வாரியர்ஸும் ஆடிவருகின்றன.

கோயம்பத்தூரில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் நிரஞ்சன் 5 ரன்னிலும், சூர்யபிரகாஷ் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 29 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது நெல்லை அணி.

இதையும் படிங்க - அந்த ஷாட்டை மொத்தமாவே தடை செய்யணும்..! அஷ்வின் கருத்துக்கு வலுசேர்க்கும் ஸ்காட் ஸ்டைரிஸ்

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த பாபா அபரஜித் மற்றும் சஞ்சய் யாதவ் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடினர். இருவரும் இணைந்து திருச்சி அணியின் பவுலிங்கை பொளந்துகட்டினர். அதிரடியாக ஆடிய சஞ்சய் யாதவ் சதமடித்தார். 55 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 103 ரன்களை குவித்தார்.

பாபா அபரஜித் 48 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 92 ரன்களை குவித்தார். 92 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தும் கூட அபரஜித்தால் சதத்தை எட்ட முடியவில்லை.

இதையும் படிங்க - கோலி ஃபார்ம் பற்றி கேட்ட நிருபர்.. கடுப்பான ரோஹித்..! வைரல் வீடியோ

சஞ்சய் யாதவ் மற்றும் அபரஜித் ஆகிய இருவரின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 236 ரன்களை குவித்த நெல்லை ராயல் கிங்ஸ் அணி, 237 ரன்கள் என்ற மிகக்கடினமான இலக்கை ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ 3-வது ஓடிஐ.. வேஸ்ட் லக்கேஜ்.. ஆல்ரவுண்டரை நீக்கிய பிசிசிஐ.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
IND VS NZ டி20 தொடரில் இருந்து தமிழக வீரர் விலகல்.. மாற்று வீரர் இவரா?