singapore open 2022: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன்: பைனலுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

By Pothy RajFirst Published Jul 16, 2022, 12:05 PM IST
Highlights

சிங்கப்பூரில் நடந்து வரும் சிங்கப்பூர் பாட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு இந்திய வீாரங்கனை பி.வி. சிந்துதகுதி பெற்றுள்ளார்.

சிங்கப்பூரில் நடந்து வரும் சிங்கப்பூர் பாட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு இந்திய வீாரங்கனை பி.வி. சிந்துதகுதி பெற்றுள்ளார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை சானா கவாகாமியை தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு சிந்து முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று அரையிறுதி ஆட்டம் நடந்தது. இதில் ஜப்பான் வீராங்கனை கவாகாமியை 21-15, 21-17 என்ற செட்களில் 32 நிமிடங்களில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை சிந்து முன்னேறினார். 

இந்த ஆண்டில் சிந்து ஏற்கெனவே சயத் மோடி இன்டர்நேஷனல், ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற சிந்து, இதில் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2022ம் ஆண்டில் சிந்து,  சூப்பர்500 டைட்டில் பட்டத்தைப் பெறுவதற்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவை.

இதற்கு முன் கடந்த 2018ம் ஆண்டு சீன ஓபன் போட்டியின் ஜப்பான் வீராங்கனை கவாமியை சந்தித்திருந்தார் சிந்து. அந்தப் போட்டியிலும் அவரை 2-0 என்ற கணக்கில் சிந்து வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் முதல் கேமிலிருந்து சிந்து ஆதிக்கம் செலுத்தினார். ஜப்பான் வீராங்கனை கவாகாமி பந்தை திருப்பி அனுப்புவதிலும், சர்வீஸ்களிலும் பல்வேறு தவறுகளைச் செய்தது சிந்துவுக்கு வெற்றிக்கு வாய்ப்பாக அமைந்தது இதனால் முதல் செட்டை சிந்து 21-15 என்று எளிதாக வென்றார்.

2வது செட்டிலும் கவாகாமி திணறினார். இதனால் தொடக்கத்திலேயே சிந்து 0-5 என்ற முன்னிலையுடன் நகர்ந்தார். ஜப்பான் வீராங்கனை செய்யும் தவறுக்காக காத்திருந்து விளையாடிய சிந்து, அந்தத் தவறுகளைதனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். முடிவில் சிந்து 19-6 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். 

click me!