துப்பாக்கி சுடுதல் மகளிருக்கான 10மீ ஏர் ரைபிள் பிரிவில் ரமீதா ஜிண்டால் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

By Rsiva kumarFirst Published Jul 28, 2024, 5:01 PM IST
Highlights

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் 2ஆம் நாளில் இன்று நடைபெற்ற மகளிருக்கான 10மீ ஏர் ரைபிள் பிரிவில் தகுதிச் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை ரமீதா ஜிண்டால் 5ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடரானது பிரம்மாண்டமாக தொடக்க விழா நிகழ்ச்சியுடன் தொடங்கி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முதல் நாளில் இந்தியா ஹாக்கி, பேட்மிண்ட, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், ரோவிங் என்று பல போட்டிகளில் பங்கேற்றது. இதில், துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் அர்ஜூன் பாபுதா மற்றும் ரமீதா ஜிண்டால் ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது.

இந்தியாவிற்கு முதல் பதக்கம் - 12 ஆண்டுகளுக்கு பிறகு துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்று கொடுத்த மனு பாக்கர்!

Latest Videos

இதே போன்று, சந்தீப் சிங் மற்றும் இளவேனில் வளரிவன் ஜோடியும் தோல்வி அடைந்து வெளியேறியது. ஆண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா சார்பாக சரப்ஜோத் சிங் மற்றும் அர்ஜூ சிங் சீமா இருவரும் பங்கேற்றனர். இதில் தகுதிச் சுற்று போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் நிலை இருந்தது. இதில் சரப்ஜோத் சிங் 577 புள்ளிகளுடன் 9ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

Paris 2024: பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

இதனைத் தொடர்ந்து மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் மனு பாக்கர் மற்றும் ரிதம் சங்வான் இருவரும் களமிறங்கினர். இதில், சங்வான் 573 புள்ளிகளுடன் 15ஆவது இடம் பிடித்து வெளியேறினார். ஆனால், ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்து வந்த மனு பாக்கர் 580 புள்ளிகளுடன் 3ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்த இறுதிப் போட்டி தற்போது தொடங்கியுள்ளது.

ஜடேஜாவிற்கு பிறகு டீமுக்கு கிடைத்த பொக்கிஷம்: 1.2 ஓவரில் 3 விக்கெட் எடுத்து ஆல் ரவுண்டராக காட்டிய ரியான் பராக்

இந்த நிலையில் தான் 2ஆம் நாளான இன்று நடைபெற்ற மகளிருக்கான 10மீ ஏர் ரைபிள் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ரமீதா ஜிண்டால் மற்றும் இளவேனில் வளரிவன் இருவரும் தகுதிச் சுற்று போட்டியில் விளையாடினர். இதில், ரமீதா 10.9, 10.5 என்று புள்ளிகளை தொடங்கினார். முதல் சீரிஸை 104.3 புள்ளிகளில் முடித்த ரமீதா, கடைசியில் 631.5 புள்ளிகள் பெற்று 5ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இளவேனில் வளரிவன் 630.7 புள்ளிகளுடன் 10ஆவது இடம் பிடிக்கவே இந்த சுற்றிலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!