Shooter Konica Layak: சோனு சூட் துப்பாக்கி பரிசாக கொடுத்த ஷூட்டர் கோனிகா லயக் தற்கொலை

Published : Dec 16, 2021, 06:02 PM ISTUpdated : Dec 16, 2021, 06:40 PM IST
Shooter Konica Layak: சோனு சூட் துப்பாக்கி பரிசாக கொடுத்த ஷூட்டர் கோனிகா லயக் தற்கொலை

சுருக்கம்

இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கோனிகா லயக் கொல்கத்தாவில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 26 வயது ஷூட்டர் கோனிகா லயக். நடிகர் சோனு சூட் இவருக்கு துப்பாக்கி கிஃப்ட் கொடுத்தபோது தான், இந்தியா முழுவதும் பிரபலமானார் கோனிகா. 

ஜார்கண்ட்டில் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதலில் தங்கம், வெள்ளி என பல பதக்கங்களை வென்றிருந்தாலும், அவரிடம் சொந்தமாக ஒரு துப்பாக்கி கூட இல்லை. ஷூட்டரான கோனிகாவிடம் சொந்தமாக ஒரு துப்பாக்கி கூட இல்லை என்பது வருத்தமான விஷயம். அதை அவரே வெளிப்படையாக தெரிவித்ததுடன், அரசாங்கம் தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும், அதனால் யாராவது தனக்கு ஒரு துப்பாக்கி மட்டும் வாங்கித்தருமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து, கோனிகாவிற்கு ரூ.2.70 லட்சம் மதிப்பிலான ஜெர்மன் ரைஃபிளை பரிசாக வழங்கினார் நடிகர் சோனு சூட். அதன்பின்னர் தான் கோனிகா பிரபலமானார். 

இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு விளையாடிவரும், அர்ஜூனா விருது பெற்றவருமான ஜாய்தீப் கர்மாகரிடம் கொல்கத்தாவில் பயிற்சி பெற்று வந்த கோனிகா லயக், கொல்கத்தா ஹாஸ்டலில் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 4 மாதங்களில் தற்கொலை செய்துகொள்ளும் 4வது ஷூட்டர் கோனிகா. இதற்கு முன் அண்மையில் குஷ்சீரத் கௌர் சந்து, ஹுனர்தீப் சிங் சோஹல் மற்றும் நமன்வீர் சிங் ப்ரார் ஆகிய 3 ஷூட்டர்களும் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்.. கொதிக்கும் ரசிகர்கள்.. பின்னணி என்ன?
சஞ்சு சாம்சனை மறைத்தாரா சுப்மன் கில்? டி20 உலகக்கோப்பை படத்தால் சர்ச்சை.. சிஎஸ்கே ரசிகர்கள் ஆவேசம்!