பேட்ஸ்மேனுக்கு பக்கத்துல ஃபீல்டிங் நிப்பாட்டிட்டு இப்படியா பந்து போடுறது!! ஒரு செகண்ட்ல ஃபீல்டரை கலங்கடித்த மாலிக்.. வீடியோ

By karthikeyan VFirst Published Nov 10, 2018, 12:55 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 1-1 என தொடரை சமன் செய்தது.
 

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 1-1 என தொடரை சமன் செய்தது.

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இதில் டி20 தொடரில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது பாகிஸ்தான். இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித்தொடர் நடந்துவருகிறது. 

இதன் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் ரோஸ் டெய்லர் மட்டுமே சிறப்பாக ஆடி 86 ரன்களை குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் அந்த அணி 50 ஓவர் முடிவில் 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

210 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 41வது ஓவரிலேயே இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் இன்னிங்ஸின்போது 33வது ஓவரை ஃபெர்குசன் வீசினார். அந்த ஓவரில் ஷோயப் மாலிக் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, நிகோல்ஸை ஷார்ட் லெக் திசையில் பேட்ஸ்மேனுக்கு அருகில் ஃபீல்டிங் நிறுத்தியிருந்தார் ஃபெர்குசன். பேட்ஸ்மேனுக்கு அருகில் ஃபீல்டிங் நிறுத்திவிட்டு ஷார்ட் பிட்ச் பந்தை வீசினார் ஃபெர்குசன். அதை மாலிக் புல் ஷாட்டாக அடிக்க, பேட்டிலிருந்து அதிவேகமாக விரைந்த பந்து பக்கத்தில் நின்று கொண்டிருந்த நிகோல்ஸின் இடது கை தோள்பட்டையில் பலமாக அடித்து காற்றில் பறந்தது. அந்த பந்தை இஷ் சோதி கேட்ச் பிடித்து மாலிக்கை வெளியேற்றினார். எனினும் நிகோல்ஸுக்கு அது சரியான அடி. வலி தாங்க முடியாமல் விழுந்தார் நிகோல்ஸ். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Have you ever seen a wicket like this? #PAKvNZ #UAETour #CricketNation #cricket 🎥= @skysportnz

A post shared by BLACKCAPS (@blackcapsnz) on Nov 9, 2018 at 9:21pm PST

பந்து வேகமாக வந்ததால் நிகோல்ஸ் என்ன செய்வதென்று யோசித்து தன்னை தற்காத்துக்கொள்ளவே முடியவில்லை. அதற்கான டைமிங்கே கிடையாது. ஒரு நொடியில் அதிவேகமாக அவரை தாக்கியது. பேட்ஸ்மேனுக்கு அருகில் ஃபீல்டிங்கை நிறுத்திவிட்டு இப்படியா பந்துவீசுவது?
 

click me!