மகளிர் டி20 உலக கோப்பை.. இந்திய கேப்டன் சாதனை சதம்!! நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி

By karthikeyan VFirst Published Nov 10, 2018, 11:22 AM IST
Highlights

மகளிர் டி20 உலக கோப்பையின் முதல் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி.
 

மகளிர் டி20 உலக கோப்பையின் முதல் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி.

மகளிர் டி20 உலக கோப்பை நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், அயர்லாந்து ஆகிய அணிகள் கலந்துகொண்டு ஆடிவருகின்றன. 

முதல் நாளான நேற்று மூன்று போட்டிகள் நடந்தன. அதில் ஒரு போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டு ஆடியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் ஜெமிமா ரோட்ரிகஸ் 59 ரன்களை குவித்தார். இந்திய மகளிர் அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர் அபாரமாக ஆடி 49 பந்துகளிலேயே சதம் விளாசி அசத்தினார். 51 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 103 ரன்களை குவித்தார் ஹர்மன்பிரீத் கவுர். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் சதமடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஹர்மன்பிரீத் கவுர் படைத்தார். இந்திய மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்களை குவித்தது.

195 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை மட்டுமே எடுத்ததால் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  
 

click me!