தவானை தூக்கிட்டு ஷ்ரேயாஸ் ஐயர்.. தம்பி நீங்களும் டீம்ல இருக்கீங்க.. தமிழக வீரருக்கு வாய்ப்பு..? உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Nov 10, 2018, 10:14 AM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலிரண்டு போட்டிகளில் ஆடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. 
 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலிரண்டு போட்டிகளில் ஆடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி, ரோஹித் சர்மா தலைமையில் டி20 தொடரையும் வென்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வென்று இந்திய அணி தொடரை வென்றுள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. 

மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உமேஷ், பும்ரா, குல்தீப் ஆகிய மூவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மூவரில் ஆடும் லெவனில் இடம்பெற்றிருந்தது பும்ராவும் குல்தீப்பும் தான். அந்த வகையில் கடைசி போட்டியில் பும்ராவுக்கு பதிலாக சித்தார்த் கவுல் அணியில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல குல்தீப் ஆடாததால் அந்த இடத்தை வாஷிங்டன் சுந்தர் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. காயத்தால் அவதிப்பட்டு வந்த சுந்தர், காயத்திலிருந்து மீண்ட நிலையில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக அவரது திறமையை நிரூபிக்க அரிய வாய்ப்பு இது. 

அதேபோல முதலிரண்டு போட்டிகளில் ஆடாத ஷ்ரேயாஸ் ஐயர் இந்த போட்டியில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஷ்ரேயாஸ் ஐயர் ஆடும் பட்சத்தில் தவான் நீக்கப்பட்டு, ரோஹித்துடன் ராகுல் தொடக்க வீரராகவும் ராகுலின் இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடவைக்க வாய்ப்புள்ளது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), ராகுல், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), குருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், நதீம்/கலீல் அகமது.
 

click me!