ஸ்பின்னுல பவுன்சரா..? என்ன கொடுமடா இது..? திகைத்து நின்ற தினேஷ் கார்த்திக்.. மிரண்டுபோன ரோஹித் சர்மா வீடியோ

Published : Nov 09, 2018, 04:48 PM IST
ஸ்பின்னுல பவுன்சரா..? என்ன கொடுமடா இது..? திகைத்து நின்ற தினேஷ் கார்த்திக்.. மிரண்டுபோன ரோஹித் சர்மா வீடியோ

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஸ்பின் பவுலரான குருணல் பாண்டியா வீசிய ஒரு பவுன்சர் ரோஹித்தையும் தினேஷ் கார்த்திக்கையும் தெறிக்கவிட்டது.   

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஸ்பின் பவுலரான குருணல் பாண்டியா வீசிய ஒரு பவுன்சர் ரோஹித்தையும் தினேஷ் கார்த்திக்கையும் தெறிக்கவிட்டது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்டது இந்திய அணி. மூன்றாவது போட்டி வரும் 11ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது. 

கடந்த 6ம் தேதி தீபாவளியன்று லக்னோவில் நடந்த போட்டியில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 195 ரன்களை குவித்தது. 196 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 124 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

இந்த போட்டியில் குருணல் பாண்டியா வீசிய பந்து ஒன்று அனைவரையும் மிரட்சியில் ஆழ்த்தியது. வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்ஸின் 13வது ஓவரை ஸ்பின் ஆல்ரவுண்டர் குருணல் பாண்டியா வீசினார். பொதுவாக ஸ்பின் பவுலிங்கில் பந்து பெரிதாக பவுன்ஸ் ஆகாது. ஆனால் அந்த ஓவரின் நான்காவது பந்தை குருணல் பாண்டியா ஷாட் பிட்ச் செய்து வீச, பந்து அவர் எதிர்பார்த்ததை விட அதிகமாக பவுன்ஸ் ஆகி, உயரமான வீரரான அந்த அணியின் கேப்டன் பிராத்வெயிட்டின் தலைக்கு மேலே சென்றது. இந்த பவுன்ஸை சற்றும் எதிர்பாராத விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தன்னால் முடிந்த அளவு குதித்து பார்த்தார். ஆனாலும் அவரால் அந்த பந்தை பிடிக்க முடியவில்லை.

குருணல் பாண்டியா வீசிய பவுன்ஸை கண்டு தினேஷ் கார்த்திக்கும் கேப்டன் ரோஹித் சர்மாவும் மிரண்டு போயினர். நமது வீரர்கள் மட்டுமல்லாமல் அந்த பந்தை எதிர்கொண்ட பிராத்வெயிட்டும் மிரண்டுபோனார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

WTC 2025-27 இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா? 3 முக்கிய விஷயங்கள்
ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து