கேப்டனை மாத்துற பேச்சுக்கே இடம் இல்ல!! கிரிக்கெட் வாரியம் அதிரடி

By karthikeyan VFirst Published Nov 9, 2018, 3:11 PM IST
Highlights

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சர்ஃப்ராஸ் அகமதுவை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் ஏசான் மணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சர்ஃப்ராஸ் அகமதுவை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் ஏசான் மணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்றுவிதமான பாகிஸ்தான் அணிகளுக்கும் சர்ஃப்ராஸ் அகமதுதான் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவரது கேப்டன்சியில் அந்த அணி சிறப்பாகத்தான் ஆடிவருகிறது. அவரது கேப்டன்சியில்தான் கடந்த ஆண்டு இறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் வென்றது. 

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக அவரது கேப்டன்சியின் கீழ் சிறப்பாக ஆடிவரும் பாகிஸ்தான் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிதாக சோபிக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் அவரது ஆட்டமும் மெச்சும்படியாக இல்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்ஃப்ராஸ் அகமது சரியாக பேட்டிங் ஆடவில்லை. அது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதேபோல ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி வென்றிருந்தாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வென்றிருக்க வேண்டும். ஆனால் பாகிஸ்தான் வெல்ல வேண்டிய போட்டியில் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி டிரா செய்தது. வெற்றி பெற வேண்டிய போட்டியில் வெற்றியை இழந்ததும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. 

இந்நிலையில் சர்ஃப்ராஸ் அகமதுவை டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து மட்டும் விடுவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் கமிட்டி தலைவர் மோசின் கான் கருத்து தெரிவித்திருந்தார். மூன்றுவிதமான அணிக்கும் சர்ஃப்ராஸ் கேப்டனாக செயல்படுவது அவர் மீதான சுமையை அதிகரிப்பதால் அவருக்கு அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது. எனவே அவரை டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விடுவிக்க பரிந்துரைத்தார். 

ஆனால் சர்ஃப்ராஸ் அகமதுவின் கேப்டன்சியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக ஆடிவருவதால், அவரை கேப்டன்சியிலிருந்து நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஏசான் மணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 

click me!