மீண்டெழுந்த ஆஸ்திரேலியா.. பரபரப்பான போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி

By karthikeyan VFirst Published Nov 9, 2018, 5:33 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அந்த அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. 
 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அந்த அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. 

தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் ஆடிவருகிறது. 

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்ததை அடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. 

அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச்(41), கிறிஸ் லின்(44), அலெக்ஸ் கேரி(47) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் அந்த அணி 231 ரன்களை எடுத்தது. 48.3 ஓவருக்கே ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணியை ரன்களை குவிக்கவிடாமல் அபாரமாக பந்துவீசி கட்டுப்படுத்திய ரபாடா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

232 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் குயிண்டன் டி காக் 9 ரன்களிலும் ஹெண்டிரிக்ஸ் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதைத்தொடர்ந்து மார்க்ரம் 19 ரன்களுக்கும் கிளாசன் 14 ரன்களுக்கும் வெளியேறினர். கேப்டன் டுபிளெசிஸ் மற்றும் டேவிட் மில்லர் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். எனினும் இந்த ஜோடி நிலைக்கவில்லை. 

டுபிளெசிஸ் 47 ரன்களில் ஆட்டமிழக்க, டேவிட் மில்லரை சார்ந்து இருந்தது தென்னாப்பிரிக்க அணி. ஆனால் அவரும் அரைசதம் கடந்த மாத்திரத்திலேயே 51 ரன்களில் ஆட்டமிழக்க, போட்டி ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது. கடைசி நேரத்தில் நிகிடியும் ரபாடாவும் தங்களால் இயன்ற அளவிற்கு அடித்து ரன் சேர்த்தனர். எனினும் வெற்றிக்கான இலக்கை எட்டமுடியவில்லை. 50 ஓவர் முடிந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணி 224 ரன்களை மட்டுமே எடுத்ததால் ஆஸ்திரேலிய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

அதனால் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலை அடைந்துள்ளது. கடைசி போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும். 
 

click me!