
இலக்கை விரட்டுவதில் கோலி சிறுத்தை போன்றவர் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் புகழாரம் சூட்டியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளையும் வென்று இந்திய அணி அசத்தியுள்ளது. 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
டர்பனில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் கோலியின் அசத்தல் சதத்தால், 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
செஞ்சூரியனில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், 9 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை இந்திய அணி வீழ்த்தியது.
இதில் முதல் ஒருநாள் போட்டியில், இந்திய கேப்டன் கோலி, தனது 33வது சதத்தை பதிவு செய்தார். இரண்டாவது பேட்டிங்கில் கோலி அடித்த 20வது சதம் அது. இரண்டாவது பேட்டிங்கில் கோலி சதமடித்த 20 போட்டிகளில் 18 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
கோலி சதமடிக்கவில்லை என்றாலும், இரண்டாவது பேட்டிங்கின்போது இலக்கை விரட்டுவதில் வல்லவர். சேஸிங் மாஸ்டர் என கோலி புகழப்படுகிறார்.
இலக்கை விரட்டுவதற்கு பெயர்போன, கேப்டன் கோலியை ஷோயப் அக்தர் புகழ்ந்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், இலக்கை விரட்டுவதில் கோலி சிறுத்தை போன்றவர். வெல் டன். இளம் வீரர்கள் கோலியின் இந்த தன்மையை அவரிடமிருந்து கற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.