நல்லா போயிட்டு இருந்த மேட்ச்ல அடுத்த திருப்பம்!! ஆர்வக்கோளாறில் அவுட்டான தவான்

First Published Jul 17, 2018, 6:38 PM IST
Highlights
shikhar dhawan run out for 44 runs


தொடக்கத்திலேயே ரோஹித் சர்மாவின் விக்கெட்டை இழந்தாலும் கோலியும் தவானும் நன்றாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரன் ரேட்டை மீட்டெடுத்து நன்றாக சென்றுகொண்டிருந்த நேரத்தில் தவான் ரன் அவுட் ஆகி வெளியேறினார். 

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. தொடர் சமநிலை அடைந்த நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் செய்ய விரும்பியதால் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

இங்கிலாந்து பவுலர்கள் தொடக்கம் முதலே சிறப்பாக வீசினர். வில்லி மற்றும் மார்க் உட் ஆகிய இருவரும் ரோஹித் மற்றும் தவானை பெரிய ஷாட்களை ஆடவிடாமல் தடுத்து நெருக்கடி கொடுத்தனர். தவானாவது சமாளித்து ஆடினார். அவ்வப்போது சில பவுண்டரிகளை விளாசினார். ஆனால் தொடக்கம் முதலே திணறிய ரோஹித் சர்மா, இரண்டு ஓவர்களை முழுவதுமாக ரன்னே எடுக்காமல் வீணடித்தார். 18 பந்துகளில் 2 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 

5.4 ஓவருக்கு வெறும் 13 ரன்னுக்கு ரோஹித்தின் விக்கெட்டை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது இந்திய அணி. அதன்பிறகு தவானுடன் ஜோடி சேர்ந்தார் கோலி. இருவரும் விக்கெட்டை இழந்துவிடாமல் ஆடியதோடு, அதிரடியாகவும் ஆடி ரன்களை குவித்தனர். ஓரளவிற்கு ரன்ரேட்டையும் உயர்த்தினர். பார்ட்னர்ஷிப் அமைந்த நிலையில், அவ்வப்போது ரன் ஓட ஆர்வம் காட்டிய தவான், அதே ஆர்வத்தால் ரன் அவுட்டாகி வெளியேறினார். 

49 பந்துகளுக்கு 44 ரன்கள் எடுத்த தவான், ஸ்டோக்ஸால் ரன் அவுட்டாக்கப்பட்டு வெளியேறினார். இதையடுத்து கோலியுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். 22 ஓவரின் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 110 ரன்கள் எடுத்துள்ளது. 
 

click me!