
உலகத்தரம் வாய்ந்த பவுலரான டிரெண்ட் போல்ட்டின் பவுலிங்கை தோனி விளாசிய விதம் வியப்பை ஏற்படுத்தியதாக ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
சென்னை டெல்லி இடையேயான நேற்றைய ஐபிஎல் போட்டி, மிகவும் பரபரப்பானதாக அமைந்தது. வாட்சன், தோனியின் அதிரடி பேட்டிங். 212 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய டெல்லி அணியின் இளம் வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் விஜய் சங்கரின் மிரட்டலான பேட்டிங் என நேற்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
புனே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் தொடக்க வீரர் ஷேன் வாட்சன் அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார். அவர் அவுட்டாகி சென்றதும் அந்த பணியை ஏற்றுக்கொண்ட தோனி, அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். டிரெண்ட் போல்ட் வீசிய 17வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்தார்.
டிரெண்ட் போல்ட் வீசிய கடைசி ஓவரிலும் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை தோனி அடித்தார். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான டிரெண்ட் போல்ட், இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் ஆவார். சிறப்பாக பந்துவீசிவரும் அவரது பந்தை தோனி பதம்பார்த்தார்.
போட்டி முடிந்து பேசிய ஷேன் வாட்சன், டிரெண்ட் போல்ட் ஒரு உலகத்தரம் வாய்ந்த பவுலர். அவரது பவுலிங்கை தோனி விளாசிய விதம் வியப்பை ஏற்படுத்தியது என தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.