அவரோட தீவிர ரசிகன் நான்.. அவர ஏன் தெரியுமா எல்லாருக்கும் புடிச்சுருக்கு..? இந்திய வீரரை வியந்து புகழ்ந்த வெளிநாட்டு ஜாம்பவான்

By karthikeyan VFirst Published Feb 12, 2019, 1:28 PM IST
Highlights

கிரிக்கெட்டில் அவரது அர்ப்பணிப்பும், அவரது உழைப்பு, போராடும் குணம் மற்றும் ஈடுபாடு ஆகியவை வியக்கத்தக்கவை. ஒரு கேப்டனாக அவரது ஆட்டம், மற்ற வீரர்களுக்கு பொறுப்பை அதிகரித்து உத்வேகத்தை அளிக்கக்கூடியது. 
 

அவரோட தீவிர ரசிகன் நான்.. அவர ஏன் தெரியுமா எல்லாருக்கும் புடிச்சுருக்கு..? இந்திய வீரரை வியந்து புகழ்ந்த வார்னே

தான் மிகத்தீவிரமான விராட் கோலியின் ரசிகர் என்று கூறியுள்ள சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே, கோலியை எல்லாருக்கும் பிடிப்பதற்கான காரணம் என்னவென்றும் கூறியுள்ளார். 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து வருகிறார். போட்டிக்கு போட்டி ஏதாவது ஒரு புதிய மைல்கல்லை எட்டும் கோலி, அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற தீராத வேட்கை கொண்டவர். 

அணிக்கு வெற்றியை தேடித்தருவதில் மிகத்தீவிரமானவர் விராட் கோலி. கிரிக்கெட்டில் அவரது அர்ப்பணிப்பும், அவரது உழைப்பு, போராடும் குணம் மற்றும் ஈடுபாடு ஆகியவை வியக்கத்தக்கவை. ஒரு கேப்டனாக அவரது ஆட்டம், மற்ற வீரர்களுக்கு பொறுப்பை அதிகரித்து உத்வேகத்தை அளிக்கக்கூடியது. 

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்றுவிதமான போட்டிகளிலும் அசைக்க முடியாத மாபெரும் சக்தியாக திகழ்கிறார். பல முன்னாள் ஜாம்பவான்களின் ஆல்டைம் சிறந்த வீரர் தேர்வாக விராட் கோலி உள்ளார். 

விராட் கோலியின் கேப்டன்சி குறித்த சில விமர்சனங்கள் இருந்தாலும் அவரது ஈடுபாடு, அர்ப்பணிப்பு, வெற்றி வேட்கை, உழைப்பு ஆகியவற்றில் எந்தவித சந்தேகமும் இல்லை. 

விராட் கோலியின் தீவிர ரசிகர் என்று தன்னை கூறிக்கொள்ளும் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே, விராட் கோலி குறித்து பேசியபோது, விராட் கோலி மிகச்சிறந்த வீரர். அவர் பேட்டிங் ஆடுவதையும் அவர் பேசுவதையும் பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அவரது தீவிர ரசிகன். விராட் கோலி அவரது நம்பிக்கையின் மீது உறுதியாக இருந்து அதன்படியே செயல்படுகிறார். அவர் மனதில் நினைப்பதை எந்தவித ஒளிவுமறைவுமின்றி வெளிப்படையாக பேசுகிறார். உண்மையாக இருக்கிறார். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி உண்மையாக இருக்கும் அவரது குணம்தான் அனைவரையும் அவரை விரும்பவைக்கிறது என்று ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். 
 

click me!