15 வீரர்களை கொண்ட உலக கோப்பை அணி!! முன்னாள் வீரரின் தேர்வு

By karthikeyan VFirst Published Feb 12, 2019, 12:16 PM IST
Highlights

மாற்று தொடக்க வீரர் மற்றும் ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளர் ஆகிய இரண்டு இடங்களுக்கான தேவையும் இந்திய அணியில் உள்ளது. மாற்று தொடக்க வீரருக்கான இடத்தை ரஹானேவிற்கு வழங்குவதற்கான வாய்ப்புள்ளது. ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடிப்பதும் ஏறத்தாழ உறுதியாகிவிட்ட விஷயம். 
 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறுவதற்கு சில வீரர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகிய இருவரும் தொடக்க வீரர்கள் என்பது உறுதியான ஒன்று. மாற்று தொடக்க வீரரான கேஎல் ராகுல் மோசமான ஃபார்மில் இருப்பதால் அவர் அணியில் இடம்பெறுவது சந்தேகம். 

ரோஹித், தவான், விராட் கோலி, அம்பாதி ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஷமி, பும்ரா, குல்தீப், சாஹல் ஆகிய 12 வீரர்கள் உலக கோப்பை அணியில் கண்டிப்பாக இருப்பர். மொத்தம் 15 வீரர்கள் கொண்ட அணியை ஏப்ரல் 23ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்திய அணியில் 12 வீரர்கள் இடம்பெறுவது உறுதி. மீதமுள்ள 3 இடங்களுக்கு கடும்போட்டி நிலவுகிறது. ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ரஹானே, விஜய் சங்கர் ஆகியோரில் யார் அணியில் இடம்பெற போகிறார்கள் என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பு. 

மாற்று தொடக்க வீரர் மற்றும் ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளர் ஆகிய இரண்டு இடங்களுக்கான தேவையும் இந்திய அணியில் உள்ளது. மாற்று தொடக்க வீரருக்கான இடத்தை ரஹானேவிற்கு வழங்குவதற்கான வாய்ப்புள்ளது. ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடிப்பதும் ஏறத்தாழ உறுதியாகிவிட்ட விஷயம். 

இவ்வாறு உலக கோப்பை அணி குறித்த விவாதங்கள் வலுத்து எதிர்பார்ப்புகள் எகிறியுள்ள நிலையில், 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ளார். ஹர்பஜன் சிங் ரிஷப் பண்ட்டை தேர்வு செய்யவில்லை. அதேநேரத்தில் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரையும் அணியில் தேர்வு செய்துள்ளதோடு ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளராக உமேஷ் யாதவை தேர்வு செய்துள்ளார். 

ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ள 15 வீரர்களை கொண்ட இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, சாஹல், தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ், விஜய் சங்கர்.
 

click me!