ரோஹித் சர்மா இல்லை.. திரும்பி வருகிறார் ரஹானே!! ஆஸ்திரேலிய தொடரில் அவங்க 2 பேருக்கும் செம டெஸ்ட்.. தேறப்போவது யார்..?

By karthikeyan VFirst Published Feb 12, 2019, 10:11 AM IST
Highlights

உலக கோப்பைக்கான இந்திய அணியில் 12 வீரர்கள் உறுதி செய்யப்பட்ட  ஒன்று. ரோஹித், தவான், விராட் கோலி, அம்பாதி ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஷமி, பும்ரா, குல்தீப், சாஹல் ஆகிய 12 வீரர்கள் உலக கோப்பை அணியில் கண்டிப்பாக இருப்பர்.
 

உலக கோப்பை வரும் மே மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய தொடர் மட்டும் உள்ளது. உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர் இதுதான். எனவே உலக கோப்பை அணிக்கான பரிசீலனையில் உள்ள வீரர்களை சோதனை செய்ய இதுதான் கடைசி வாய்ப்பு.

உலக கோப்பைக்கு முன் ஐபிஎல்லும் நடக்க உள்ளது. எனவே தொடர்ந்து ஆடிவரும் சில வீரர்களுக்கு ஓய்வு தேவை. கேப்டன் விராட் கோலிக்கு நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டது. 

அந்த வகையில் ஆஸ்திரேலிய தொடரில் தொடக்க வீரரும் துணை கேப்டனுமான ரோஹித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்படலாம் என கருதப்படுகிறது. எனவே ரஹானே மற்றும் கேஎல் ராகுல் அணியில் எடுக்கப்படலாம். கேஎல் ராகுல் எடுக்கப்படுவது சந்தேகம். ஆனால் ரஹானே கண்டிப்பாக எடுக்கப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் உலக கோப்பை அணிக்கான பரிசீலனையில் ரஹானே உள்ளதாக தேர்வுக்குழு தலைவர் தெரிவித்திருந்தார். எனவே ரஹானே, ஆஸ்திரேலிய தொடரில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. 

அதேபோல உலக கோப்பைக்கான இந்திய அணியில் 12 வீரர்கள் உறுதி செய்யப்பட்ட விஷயம்தான். ரோஹித், தவான், விராட் கோலி, அம்பாதி ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஷமி, பும்ரா, குல்தீப், சாஹல் ஆகிய 12 வீரர்கள் உலக கோப்பை அணியில் கண்டிப்பாக இருப்பர்.

மொத்தம் 15 வீரர்கள் கொண்ட அணியை உலக கோப்பைக்கு அழைத்து செல்லலாம். இந்த அணியை ஏப்ரல் 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். எஞ்சிய 3 வீரர்களில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இருப்பர் என எதிர்பார்க்கலாம். ஆனால் 3 விக்கெட் கீப்பர்கள் தேவையில்லை என கருதினால், ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இருவரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும்.

அந்த வகையில் ரிஷப் பண்ட்டா தினேஷ் கார்த்திக்கா என்பதை முடிவு செய்வதற்கு ஆஸ்திரேலிய தொடர்தான் கடைசி வாய்ப்பு. இவர்கள் இருவரில் யார் அபாரமாக ஆடி தேர்வாளர்களை கவர்கிறார்களோ அவருக்குத்தான் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் ஆஸ்திரேலிய தொடர் இவர்கள் இருவருக்கும் இடையே கடும் போட்டியாக இருக்கும். 
 

click me!