அவங்களலாம் உட்கார வச்சுட்டு இந்த பசங்கள டீம்ல சேருங்க!! முன்னாள் வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published Feb 12, 2019, 11:25 AM IST
Highlights

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என இந்திய அணி நீண்ட சுற்றுப்பயணத்தை முடித்துள்ள நிலையில், அடுத்ததாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. 
 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என இந்திய அணி நீண்ட சுற்றுப்பயணத்தை முடித்துள்ள நிலையில், அடுத்ததாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. 

உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி ஆடும் கடைசி தொடர் இது என்பதால், உலக கோப்பை அணியில் ஓரிரு இடங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய வீரர்களை தேர்வு செய்வதற்கான வாய்ப்பாக இந்த தொடர் பார்க்கப்படுகிறது. எனவே ஓரிரு இடங்களுக்கு பரிசீலனையில் உள்ள வீரர்கள் இந்த தொடரில் சோதிக்கப்படுவார்கள்.

மாற்று தொடக்க வீரர், ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளர் ஆகியவற்றிற்கான தேவை இந்திய அணியில் உள்ளது. அந்த இடங்களை யாரை வைத்து நிரப்பலாம் என்று தேர்வாளர்கள் முடிவெடுப்பதற்கு இந்த தொடர்தான் கடைசி வாய்ப்பு.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என நீண்ட சுற்றுப்பயணத்தை முடித்துள்ளதாலும் அடுத்ததாக ஐபிஎல் தொடரும் நடக்க உள்ளதாலும் சீனியர் வீரர்கள் சிலருக்கு ஆஸ்திரேலிய தொடரில் ஓய்வளிக்கப்பட வாய்ப்புள்ளது. ரோஹித் சர்மா, புவனேஷ்வர் குமார் உள்ளிட்டோருக்கு ஓய்வளிக்கப்படலாம். 

சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டாலும் உலக கோப்பைக்கான அணி தேர்வை மையமாக வைத்தே மாற்று வீரர்கள் களமிறக்கப்படுவார்கள். ஆனால் அப்படி செய்யக்கூடாது என்று ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். உலக கோப்பையில் மட்டுமே கவனம் செலுத்தக்கூடாது என்றும் அதன்பிறகான இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இந்தியா டுடேவிற்கு ஹர்பஜன் சிங் அளித்த பேட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறந்த 11-13 வீரர்களுடன் இந்திய அணி களமிறங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் இப்போதுதான் நீண்ட சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார்கள். இந்நிலையில், அவர்களை ஆஸ்திரேலிய தொடரிலும் ஆடவைப்பது வீரர்களை சோர்வடைய செய்யும். அடுத்ததாக ஐபிஎல் தொடரும் உள்ளது. எனவே சீனியர் வீரர்களுக்கு போதுமான ஓய்வளிக்க வேண்டியது அவசியம்.

சீனியர் வீரர்களுக்கு ஓய்வளித்துவிட்டு, பிரித்வி ஷா, மயன்க் அகர்வால், பிரியங்க் பஞ்சால் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பளிக்க வேண்டும். அதேபோல சித்தார்த் கவுல், மயன்க் மார்கண்டே ஆகிய பவுலர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். இளம் வீரர்களுக்கான வாய்ப்பை அதிகரிப்பதன்மூலம் நிறைய இளம் வீரர்களை பெறமுடியும். உலக கோப்பையை மட்டுமே மனதில் வைத்து செயல்பட கூடாது. அதன்பிறகான இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டும் ஆஸ்திரேலிய தொடருக்கான அணி தேர்வு இருக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 

click me!