விராட் கோலி சிறந்த தலைவர்.. ஆனால் அவங்க 2 பேரும் வியூகங்களில் சிறந்த கேப்டன்கள்!! ஷேன் வார்னே ஓபன் டாக்

By karthikeyan VFirst Published Feb 11, 2019, 10:57 AM IST
Highlights

விராட் கோலி நல்ல தலைவர்தான் என்றாலும் வியூகங்களில் சிறந்த கேப்டன்கள் யார் என்று ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார். 
 

விராட் கோலி நல்ல தலைவர்தான் என்றாலும் வியூகங்களில் சிறந்த கேப்டன்கள் யார் என்று ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார். 

அணிக்கு வெற்றியை தேடித்தருவதில் மிகத்தீவிரமானவர் விராட் கோலி. கிரிக்கெட்டில் அவரது அர்ப்பணிப்பும், அவரது உழைப்பு, போராடும் குணம் மற்றும் ஈடுபாடு ஆகியவை வியக்கத்தக்கவை. ஒரு கேப்டனாக அவரது ஆட்டம், மற்ற வீரர்களுக்கு பொறுப்பை அதிகரித்து உத்வேகத்தை அளிக்கக்கூடியது. ஆனால் களவியூகம், பவுலிங் சுழற்சி ஆகியவற்றில் கோலி இன்னும் மேம்பட வேண்டியிருக்கிறது. 

முன்பு இருந்ததைவிட இந்த விஷயங்களில் தற்போது மேம்பட்டிருக்கிறார் என்றாலும் ஒரு தலைசிறந்த கேப்டனாக ஜொலிக்க, இன்னும் மேம்பட வேண்டியது அவசியம்.

இந்நிலையில், சமகால கிரிக்கெட்டில் வியூக ரீதியாக சிறந்த கேப்டன் யார் என்று ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள வார்னே,  தற்போதைய சூழலில் விராட் கோலி தான் மிகச்சிறந்த அணி தலைவர். கேப்டன் மற்றும் தலைவர் ஆகிய இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. விராட் கோலி மிகச்சிறந்த வீரர். அணியை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார். அந்த வகையில் விராட் கோலி தான் மிகச்சிறந்த அணி தலைவர். ஆனால் வியூகங்களில் வல்லவர்களாக திகழும் கேப்டன்கள் என்றால் டிம் பெய்னும்(ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன்) கேன் வில்லியம்சனும்(நியூசிலாந்து கேப்டன்)தான் என்று ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். 
 

click me!