ஐசிசி எச்சரித்தும் அடங்காமல் அவுட்டான நியூசிலாந்து வீரர்!! வீடியோ

By karthikeyan VFirst Published Feb 10, 2019, 5:36 PM IST
Highlights

213 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் ரோஹித் சர்மா, விஜய் சங்கர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, தோனி, குருணல் பாண்டியா ஆகியோர் சிறப்பாக ஆடியும் கடைசியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது இந்திய அணி. 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான டி20 தொடரின் கடைசி போட்டியில் திரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 2-1 என தொடரை வென்றது. 

முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து வெற்றி கட்டாயத்துடன் இரு அணிகளும் இன்று கடைசி டி20 போட்டியில் மோதின. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, தொடக்க ஜோடியான முன்ரோ - சேஃபெர்ட்டின் அதிரடியான தொடக்கம் மற்றும் கோலின் டி கிராண்ட்ஹோமின் அதிரடி ஆகியவற்றின் விளைவாக 212 ரன்களை குவித்தது. 

213 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் ரோஹித் சர்மா, விஜய் சங்கர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, தோனி, குருணல் பாண்டியா ஆகியோர் சிறப்பாக ஆடியும் கடைசியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது இந்திய அணி. இதையடுத்து நியூசிலாந்து அணி 2-1 என தொடரை வென்றது. 

இந்த போட்டியில் மீண்டும் ஒருமுறை தனது மின்னல் வேக ஸ்டம்பிங்கின் மூலம் அனைவரையும் வியக்கவைத்தார் தோனி. அதிரடியாக ஆடிவந்த நியூசிலாந்து பேட்ஸ்மேன் சேஃபெர்ட்டை மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து மிரட்டினார். அதிவேக ஸ்டம்பிங், சமயோசித ரன் அவுட், அபாரமான கேட்ச்கள், அற்புதமான ஆலோசனைகள் என தலைசிறந்த விக்கெட் கீப்பராக திகழ்பவர் தோனி. 

அவ்வப்போது மிரட்டலான சில ஸ்டம்பிங்குகளை செய்து ஹாட் டாப்பிக்காவது தோனியின் வழக்கம். தோனியின் அதிவேக மற்றும் துல்லியமான ஸ்டம்பிங் திறமையை வியந்து புகழும் விதமாக ஐசிசி ஒரு பதிவை போட்டிருந்தது. எதிரணி பேட்ஸ்மேன்களை எச்சரிக்கும் விதமான பதிவு அது. ஸ்டம்புக்கு பின்னால் தோனி நின்றால், உஷாராக பேட்டிங் ஆடுமாறு எச்சரித்து டுவீட் செய்திருந்தது. 

ஐசிசி எச்சரித்தும் அசால்ட்டாக பேட்டிங் ஆடி ஸ்டம்பிங் ஆனார் சேஃபெர்ட். கடைசி டி20 போட்டியில் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்துவந்த சேஃபெர்ட்டை குல்தீப்பின் பந்தில் மிக துல்லியமாகவும் அதிவேகமாகவும் ஸ்டம்பிங் செய்து பிரேக் கொடுத்தார் தோனி. அந்த வீடியோ இதோ.. 

pic.twitter.com/LyPxZu6xyA

— रति शंकर शुक्ल (@rati_sankar)
click me!