தோனிக்கு வயசு ஆயிடுச்சு.. இங்கிலாந்திடம் தோற்றதற்கு இவங்க தான் காரணம்!! சேவாக் பகிரங்க குற்றச்சாட்டு

First Published Jul 19, 2018, 10:50 AM IST
Highlights
sehwag blame batsmen for lost odi series against england


இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்ததற்கு, பேட்ஸ்மேன்கள் தான் காரணம் என இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் குற்றம்சாட்டியுள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இங்கிலாந்து அணி வென்றது. முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தன. தொடரை வெல்வது எந்த அணி என்பதை தீர்மானிக்கும் போட்டியான கடைசி ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் சொதப்பலான பேட்டிங்கால் இங்கிலாந்து அணி எளிமையாக வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் ரோஹித் சர்மா சோபிக்கவில்லை. கோலியும் தவானும் நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிக்கொண்டிருந்தபோது தவான் ரன் அவுட் ஆனார். வந்தவுடனே சிறப்பாக ஆடத்தொடங்கிய தினேஷ் கார்த்திக்கும் நிலைக்கவில்லை. ரெய்னா வந்தவுடனே சென்றுவிட்டார்.

தனக்கே உரிய பாணியில் சிறப்பாக ஆட்டத்தை எடுத்து சென்ற கோலி, அடில் ரஷீத்தின் அருமையான பவுலிங்கில் வெளியேறினார். இரண்டாவது போட்டியில் ஆடியதுபோலவே மந்தமாக ஆடிய தோனி, 66 பந்துகளுக்கு 42 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில் இந்திய அணி 256 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

நல்ல பேட்டிங் வரிசையை கொண்ட இங்கிலாந்து அணிக்கு இந்த ஸ்கோர் எந்தவிதமான அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. எளிதாக இலக்கை எட்டி இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்திய அணி தொடரை இழந்தது. 

இதுதொடர்பாக பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக், இந்திய அணி தோற்றதற்கு குறைவான ரன்கள் எடுத்ததே காரணம். 30-40 ரன்கள் குறைவாக எடுக்கப்பட்டது. பேட்ஸ்மேன்கள் இன்னும் சிறப்பாக ஆடியிருக்க வேண்டும். தோனி, கோலி, ரோஹித், தவான் ஆகியோர் இன்னும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்திருந்தால், பவுலர்களால் எதிரணிக்கு நெருக்கடியை கொடுத்திருக்க முடியும். எனவே இந்த தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் தான் காரணம் என சேவாக் பகிரங்கமாக தெரிவித்தார். 

மேலும் தோனி குறித்து பேசிய சேவாக், தோனியும் தினேஷ் கார்த்திக்கும் இறுதி வரை நின்று ஆடியிருந்தால், முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும். இப்போது இருப்பது பழைய தோனி இல்லை. தோனியால் பழைய ஆட்டத்தை ஆட முடியாததற்கு வயதும் ஒரு காரணி என சேவாக் தெரிவித்துள்ளார். 
 

click me!