
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடந்து வருகிறது. இதில், காலிறுதிப் போட்டியின் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி உலகின் நம்பர் ஒன் ஜோடியான இந்தோனேஷியாவின் ஃபஜர் அல்ஃபியன் மற்றும் முகமது ரியான் ஆர்டியாண்டோவை எதிர்கொண்டது.
ரூ.7 லட்சத்திற்கு புதிதாக வாட்ச் வாங்கிய விராட் கோலி: வைரலாகும் இன்ஸ்டா பிக்ஸ்!
இதில் சாத்விக் – சிராக் ஜோடி 21-13, 21-13 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதைத் தொடர்ந்து நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்த சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி தென் கொரியாவின் மின் ஹூக் கேங் – சென் ஜாய் சியோ ஜோடியை எதிர்கொண்டது. இதில், தென்கொரியா ஜோடியை 17-21,21-19 மற்றும் 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
முதல் வெற்றிக்காக போராடும் சேலம் – திருச்சி அணிகள்!
இந்த நிலையில், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில், இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் நம்பர் ஒன் ஜோடியான ஆரோன் சியோ – சோ வூய்யிக் ஜோடியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் சிறப்பான ஆடிய சாத்விக் – சிராக் ஜோடி 21-17, 21-18 என்ற செட் கணக்கில் உலகின் நம்பர் ஒன் ஜோடியான மலேசிய ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் பட்டத்தை வென்ற முதல் ஜோடியாக இவர்கள் இருவரும் தங்களது பெயரை இன்று பதித்துள்ளனர்.
இங்கிலாந்தை பீதியடையச் செய்த உஸ்மான் கவாஜா: முதல் வீரராக சதம் அடித்து சாதனை!
இந்திய விளையாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிகளில் இதுவும் ஒன்று. இதற்கு முன்னதாக பிரகாஷ் படுகோன் மற்றும் புல்லேலா கோபிசந்த் ஆகியோர் யோனெக்ஸ் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டனில் டைட்டில் வென்றனர். இதே போன்று பிவி சிந்து 2019 BWF உலக சாம்பியன்ஷிப் டைட்டில் வின்னரானர். இவர்களது வரிசையில் தற்போது ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் ஜோடியான மலேசியா ஜோடியை வீழ்த்தி இந்தோனேசியா ஓபன் சூப்பர் 1000 என்ற மாபெரும் பட்டத்தை வென்றது. இந்த வெற்றிக்குப் பிறகு அவர்கள் தங்களது குருவான புல்லேலா கோபிசந்தின் காலில் விழுந்து சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி வணங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.