நடிகைகளின் ஹாட் வீடியோஸ்.. YouTube Historyயால் வந்த புதிய சர்ச்சை.. சிக்கிய RRன் ரியான் பராக் - முழு விவரம்!

By Ansgar R  |  First Published May 27, 2024, 8:44 PM IST

Riyan Parag : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரியான் பராக், சமீபத்தில் பாலிவுட் நடிகைகள் அனன்யா பாண்டே மற்றும் சாரா அலி கான் ஆகியோரின் ஹாட் வீடியோகளை இணையத்தில் தேடி புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார்.


இந்த ஐபிஎல் 2024 சீசனில் RR உடன் ஒரு சிறப்பான சீசனைக் கொண்டிருந்த கிரிக்கெட் வீரர் ரியான் பராக், SRHக்கு எதிரான நாக் அவுட் குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் தனது அணிக்காக சரியாக விளையாடாத நிலையில், அதன் விளைவாக RR அணியின் முன்னணி போட்டியாளர்களில் ஒருவராக இருந்த போதிலும் அவர் போட்டியிலிருந்து வெளியேறினார்.

சரி ரியான் சிக்கலில் சிக்கியது எப்படி?

Tap to resize

Latest Videos

ரியான் பராக் நேற்று தனது YouTubeல் தனது கேமிங் அமர்வுகளின் நேரடி ஸ்ட்ரீம்களை மீண்டும் தொடங்கினார், ஆனால் இறுதியில் அது ஒரு சர்ச்சைக்குரிய ஸ்ட்ரீமாக மாறியது என்றால் அது மிகையல்ல. அந்த ஸ்ட்ரீம் தொடங்கிய சில நிமிடங்களில், பராக் தனது ஸ்ட்ரீமிங்கில் ஒளிபரப்ப சில பதிப்புரிமை இல்லாத இசையை இணையத்தில் தேடியுள்ளார். 

ஹர்திக் பாண்டியா – நடாசா விவாகரத்து ரூமர்ஸ்: விவாகரத்து பெற்று பிரிந்த இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் யார் யார்?

அப்போது தான் அந்த லைவ் ஸ்ட்ரீம், ஒரு சர்ச்சை ஸ்ட்ரீம் என்ற நிலைக்கு மாறியுள்ளது. YouTube தலத்தில், இலவச மியூசிக் தேட அவர் தொடங்கியபோது, அவர் ஏற்கனவே தேடியிருந்த சில விஷயங்கள் அப்பட்டமாக அந்த லைவ் ஸ்ட்ரீமில் தெரியவந்துள்ளது. அதில் Ananya Pandey Hot மற்றும் Sara Ali Khan Hot போன்ற விஷயங்களை தேடியது அம்பலமானது. 

இதை Screen Shot எடுத்த அவரது ஆதரவாளர்கள் அதை இணையத்தில் வெளியிட்டு பெரிய அளவில் இப்பொது வைரலாக்கி வருகின்றனர். YouTube தலத்தில் இவர் பிரபல நடிகைகளின் ஹாட் வீடியோகளை எப்போது பார்த்துகொண்டுருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். ஆனால் ரியான் இதற்கு எந்த பதிலும் இதுவரும் சொல்லவில்லை. 

ஏற்கனவே சில ஊடக பதிவுகளுக்கான அவரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த IPL சீசனில் ரியான் 573 ரன்கள் குவித்து, அவரது Hatersக்கு நல்ல பதிலடி கொடுத்துள்ளார் என்றே கூறவேண்டும்.  

கொல்கத்தா அணிக்கு டிராபி வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

click me!