ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் ஐபிஎல் 2024 தொடரில் சாம்பியனான கேகேஆர் அணியின் வெற்றியை கொண்டாடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னையின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பேட் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்தார்.
Former Knight Rider - Chris Gayle celebrating the IPL victory of KKR. 🔥💥 pic.twitter.com/LEpIa8UA5q
— Johns. (@CricCrazyJohns)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகள் எடுத்தார். மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். வைபவ் அரோரா, சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் எடுத்தனர்.
முதல் முறையாக டிராபி வென்ற ஷ்ரேயாஸ் ஐயர் – ஐபிஎல் 2024 விருது, பரிசுத்தொகை வென்றவர்கள் பட்டியல்!
பின்னர் எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சுனில் நரைன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு குர்பாஸ் அகமது மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் இணைந்து வெற்றியின் விளிம்பு வரை சென்றது. அப்போது குர்பாஸ் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக ஷ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 52 ரன்களும் எடுக்கவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3ஆவது முறையாக சாம்பியன் ஆனது.
இதைத் தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வளர்ந்து வரும் வீரருக்கான விருது, ஃபேர்பிளே விருது, பர்பிள் கேப், ஆரஞ்சு கேப், மிகவும் மதிப்புமிக்க வீரர் விருது, 2ஆம் இடம் பிடித்த ஹைதராபாத் அணிக்கு விருதுகளும், பரிசு தொகையும் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கடைசியாக சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ரூ.20 கோடிக்கான காசோலையும், ஐபிஎல் டிராபியும் வழங்கப்பட்டது.
யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக கண்ணீரை துடைத்த காவ்யா மாறன் – வைரலாகும் வீடியோ!
முதல் முறையாக ஒரு கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் டிராபியை தனது கையில் ஏந்தியுள்ளார். இந்த நிலையில் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரரும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரருமான கிறிஸ் கெயில் கேகேஆருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 17ஆவது சீசனில் சாம்பியனான கேகேஆர் அணியின் வெற்றியை கொண்டாடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கையில் சரக்கு கிளாஸ் வைத்துக் கொண்டு கடலில் போட்டில் நின்று கொண்டு டான்ஸ் ஆடியபடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.