ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 3ஆவது முறையாக சாம்பியனான நிலையில் கேகேஆர் உரிமையாளர் கிங் கான் ஷாருக்கான் சிஎஸ்கே சிஎஸ்கே சிஎஸ்கே என்று கோஷமிடச் சொன்ன வீடியோ வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனுக்கான இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன் 6 ரன்களில் ஆட்டமிழக்க, ரஹ்மானுல்லா குர்பாஸ் 39 ரன்களில் வெளியேறினார்.
undefined
இறுதியாக வெங்கடேஷ் ஐயர் 52 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களும் எடுக்கவே 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கேகேஆர் வெற்றி பெற்று 3ஆவது முறையாக சாம்பியனானது. சாம்பியனான கேகேஆர் அணிக்கு ரூ.20 கோடிக்கான காசோலையும், ஐபிஎல் டிராபியும் வழங்கப்பட்டது.
இரண்டாவது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ரூ.12.5 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது. நன்மதிப்புடன் ஐபிஎல் விதிகளை பின்பற்றி விளையாடிய ஹைதராபாத் அணிக்கு Fairplay Award வழங்கப்பட்டது. சிறந்த பிட்ச் மற்றும் கிரவுண்ட் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு வழங்கப்பட்டது.
மேலும், வளர்ந்து வரும் வீரருக்கான எமெர்ஜிங் பிளேயர் விருது நிதிஷ் குமார் ரெட்டிக்கு வழங்கப்பட்டது. இப்படி ஒவ்வொரு விருதையும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வென்ற நிலையில் போட்டியில் தோல்வி அடைந்து டிராபியை பற்கொடுத்தது. இந்த நிலையில் போட்டிக்கு பிறகு ரசிகர்களை சந்தித்தா கிங் கான் ஷாருக்கான் சிஎஸ்கே சிஎஸ்கே சிஎஸ்கே என்று கோஷமிடச் செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான தனது அன்பை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.