இந்தியா vs இங்கிலாந்து: புனே T20யில் இந்தியா மோசமான தொடக்கம்; சஞ்சு 1 ரன்னுக்கு காலி!

India vs England, Sanju Samson : புனேயில் நடைபெற்று வரும் 4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் இழந்து முதலில் பேட் செய்த நிலையில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை இந்திய அணி தடுமாறியது.

Sanju Samson 1, Tilak Varma and Suryakumar Yadav Gone for no runs against England in 4th T20 Match rsk

India vs England, Sanju Samson : இந்தியா vs இங்கிலாந்து: புனேவில் நடைபெற்று வரும் 4ஆவது T20 போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு மோசமான தொடக்கம். மூன்று முக்கிய பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டமிழந்துள்ளனர், இதில் 2 வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். 5 போட்டிகள் கொண்ட T20 தொடரின் 4 போட்டி தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் வென்று இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார். இந்திய அணியின் தொடக்கம் மிகவும் மோசமாக அமைந்தது. வெறும் 2 ஓவர்களில் 12 ரன்களுக்குள் மூன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பினர்.

'விசில் போடு'; புதிய ஜெர்சியுடன் கெத்தாக களமிறங்கும் சிஎஸ்கே; என்னென்ன மாற்றங்கள்?

Latest Videos

முதலில் சஞ்சு சாம்சன், பின்னர் திலக் வர்மா, அதைத் தொடர்ந்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் என்று 3 பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மூன்று விக்கெட்டுகளும் ஒரே ஓவரில் விழுந்தன. முதல் 2 பந்துகளில் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா இருவரும் ஆட்டமிழந்த நிலையில் கடைசி பந்தில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதில் 2 திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் டக் அவுட்முறையில் ஆட்டமிழந்து வெளியேறினர். இங்கிலாந்து பந்துவீச்சாளர் சாஹிப் மஹ்மூத் ஆரம்பத்திலேயே அசத்தினார்.

Sanju Samson 1, Tilak Varma and Suryakumar Yadav Gone for no runs against England in 4th T20 Match rsk

இந்தப் போட்டியில் தனது முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலமாக இந்தியாவிற்கு எதிராக டி20 போட்டியில் மெய்டன் உடன் 3 விக்கெட்டுகள் எடுத்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை மஹ்மூத் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக 2007 ஆம் ஆண்டு கெபெராவில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஜெரோம் டெய்லருடன் இணைந்து டி20 போட்டியில் ஒரு பந்து வீச்சாளர் முதன் முதலில் 3 விக்கெட் மெய்டன் எடுத்த 2ஆவது ஓவர் இதுவாகும்.

ஐபிஎல் 2025: சொத்து மதிப்பில் 'கிங்'; ருத்ராஜ் கெய்க்வாட் இத்தனை கோடிக்கு அதிபதியா?

இங்கிலாந்துக்கு எதிராக சஞ்சு சாம்சனின் தொடர் தடுமாற்றம்

இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளிலும் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் தொடர்ந்து தடுமாறி வருகிறார். புனேவிலும் அதே பாணியில் ஆட்டமிழந்தார். அவர் வெறும் 1 ரன் எடுத்து மஹ்மூத் பந்தில் ஆட்டமிழந்தார். இதற்கு முன்பு கொல்கத்தா, சென்னை மற்றும் ராஜ்கோட்டில் ஜோஃப்ரா ஆர்ச்சரின் ஷார்ட் பந்துகளில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். கடந்த 4 இன்னிங்ஸில் சஞ்சு வெறும் 35 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் 26 ரன்கள் கொல்கத்தாவில் எடுக்கப்பட்டது. இதனால் அவரது ஆட்டம் இந்திய அணிக்கு கவலை அளிக்கிறது.

Suryakumar Yadav and Sanju Samson continue to struggle in this T20I series against England: 💔

Suryakumar Yadav - 0(4), 14(7), 12(7), 0(3)

Sanju Samson - 26(20), 5(3), 3(6), 1(3) படம் இங்கே

— Saabir Zafar (@Saabir_Saabu01)

சூர்யா, திலக் டக் அவுட்

சஞ்சு சாம்சனைத் தவிர, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மாவும் டக் அவுட் ஆனார்கள். மஹ்மூத்தின் ஒரே ஓவரில் இருவரும் ஆட்டமிழந்தனர். பார்மில் இருந்த திலக் கடந்த இரண்டு போட்டிகளில் சொதப்பியுள்ளார். சூர்யகுமாரும் தொடர்ந்து சொதப்பி வருகிறார். கடந்த 7 இன்னிங்ஸில் சூர்யகுமார் வெறும் 52 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் இந்திய அணிக்கு அவரது மோசமான பார்ம் பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி 3 மாற்றங்களை செய்தது. அதன்படி துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் முகமது ஷமி ஆகியோர் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக ஷிவம் துபே, ரிங்கு சிங் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்றனர்.

கிரிக்கெட்டின் கடவுள், வாழ்நாள் சாதனையாளர்! சச்சின் டெண்டுல்கரை கௌரவிக்கும் பிசிசிஐ

இந்திய அணியின் பிளேயிங் லெவன்:

அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங்.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image