Sania Mirza: ஓய்வு அறிவித்தார் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா..! ரசிகர்கள் அதிர்ச்சி

Published : Jan 19, 2022, 04:55 PM IST
Sania Mirza: ஓய்வு அறிவித்தார் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா..! ரசிகர்கள் அதிர்ச்சி

சுருக்கம்

2022ம் ஆண்டு பருவத்துடன் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அறிவித்துள்ளார்.  

35 வயதான இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர். இரட்டையர் பிரிவில் உலகளவில் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்திருக்கிறார். கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை சானியா மிர்சா தான். கடந்த ஆண்டு செப்டம்பரில் இரட்டையர் பிரிவில் 43வது பட்டம் வென்றார். 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில், மகளிர் இரட்டையர் பிரிவில் நாடியாவுடன் இணைந்து ஆடிய சானியா மிர்சா தோல்வியடைந்தார். மகளிர் இரட்டையர் பிரிவில் தோல்வியடைந்திருந்தாலும், அடுத்ததாக ராஜீவ் ராமுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடவுள்ளார்.

இந்நிலையில், மகளிர் இரட்டையர் பிரிவில் அடைந்த தோல்விக்கு பிறகு, தனது ஓய்வு முடிவை அறிவித்தார் சானியா மிர்சா. இதுகுறித்து பேசிய சானியா மிர்சா,  இதுவே டென்னிஸில் எனது கடைசி பருவம். என்னால் இப்போது காயமடைந்தால் உடனடியாக தேறமுடியவில்லை. காயத்திலிருந்து மீண்டு ஃபிட்னெஸ் பெற அதிக காலம் எடுக்கிறது. 3 வயது மகனுடன் பயணம் செய்வதால், அவனுக்கும் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. இந்த போட்டியில் ஆடும்போது கூட எனது கால் வலித்தது. ஆனால் அதை தோல்விக்கான காரணமாக கூறவில்லை. ஆனால் அதேவேளையில் என்னால் இப்போதெல்லாம் காயத்திலிருந்து மீள அதிக காலம் எடுக்கிறது. எனவே இந்த பருவத்துடன் ஓய்வுபெற முடிவு செய்துள்ளேன் என்றார் சானியா மிர்சா.

கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கை திருமணம் செய்துகொண்ட சானியா மிர்சாவுக்கு கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. தனது குழந்தையுடன் பயணம் செய்வதும் தனக்கு கடினமாக இருப்பதாக சானியா மிர்சா கூறினார்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!