India vs South Africa: ஆரம்பத்துலயே விக்கெட்டை வீழ்த்திய பும்ரா.. இந்தியாவை செமயா சர்ப்ரைஸ் செய்த டெம்பா பவுமா

By karthikeyan VFirst Published Jan 19, 2022, 2:50 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அந்த அணியின் தொடக்க வீரர் ஜே மலானை ஆரம்பத்திலேயே வீழ்த்தி இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார் பும்ரா.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று பார்லில் நடந்துவருகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் ஒன்றரை மணிக்கு டாஸ் போடப்பட்டு, 2 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தென்னாப்பிரிக்க அணியில் மார்கோ யான்செனும், இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயரும் இந்தன் போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகினர்.

தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ஜே மலான், எய்டன் மார்க்ரம், ராசி வாண்டெர் டசன், டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் மில்லர், ஆண்டில் ஃபெலுக்வாயோ, மார்கோ யான்சென், கேஷவ் மஹராஜ், டப்ரைஸ் ஷாம்ஸி, லுங்கி இங்கிடி.

இந்திய அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், ஷர்துல் தாகூர், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா.

குயிண்டன் டி காக் மற்றும் ஜே மலான் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய இருவரும் பவுலிங் ஸ்பெல்லை தொடங்கினர். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியின் வெற்றிகரமான பவுலிங் காம்போவான புவனேஷ்வர் குமார் - பும்ரா ஜோடி இந்த  போட்டியில் இணைந்து பவுலிங்கை தொடங்கினர்.

இருவரும் ரன் வழங்காமல் கட்டுக்கோப்பாக வீச, பும்ரா வீசிய இன்னிங்ஸின் 5வது ஓவரில் ஜே மலான் 6 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 5வது ஓவரிலேயே முதல் விக்கெட்டை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் பும்ரா. 3ம் வரிசையில் மார்க்ரம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் டெம்பா பவுமா இறங்கி அதிர்ச்சியளித்தார். மார்க்ரம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். ஆனால் அவர் தொடக்க வீரராக இறங்கவில்லை. எனவே 3ம் வரிசையிலாவது இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை இறக்கிவிடாமல் 3ம் வரிசையில் தானே களத்திற்கு வந்தார் கேப்டன் டெம்பா பவுமா.

இதையடுத்து டி காக்கும் பவுமாவும் இணைந்து பேட்டிங் ஆடிவருகின்றனர்.
 

click me!