India vs South Africa: முதல் ஒருநாள் போட்டி டாஸ் ரிப்போர்ட்.. இந்திய அணியில் இளம் வீரர் அறிமுகம்

Published : Jan 19, 2022, 02:02 PM IST
India vs South Africa: முதல் ஒருநாள் போட்டி டாஸ் ரிப்போர்ட்.. இந்திய அணியில் இளம் வீரர் அறிமுகம்

சுருக்கம்

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடரை 2-1 என தென்னாப்பிரிக்க அணி வென்றது. அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. பின்னர் வரும் 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் அடுத்த 2 போட்டிகள் நடக்கின்றன.

இன்று நடக்கும் முதல் போட்டியில் இந்திய நேரப்படி பிற்பகல் ஒன்றரை மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற குயிண்டன் டி காக் ஒருநாள் போட்டியில் ஆடுகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஃபாஸ்ட் பவுலர் மார்கோ யான்சென் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அறிமுகமாகியுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ஜே மலான், எய்டன் மார்க்ரம், ராசி வாண்டெர் டசன், டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் மில்லர், ஆண்டில் ஃபெலுக்வாயோ, மார்கோ யான்சென், கேஷவ் மஹராஜ், டப்ரைஸ் ஷாம்ஸி, லுங்கி இங்கிடி.

கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணியில் இளம் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர், அஷ்வின், சாஹல் ஆகிய 5 பவுலர்கள் மட்டுமே அணியில் ஆடுவதால், கூடுதல் பவுலிங் ஆப்சன் தேவை என்ற வகையில் ஆல்ரவுண்டராக வெங்கடேஷ் ஐயர் எடுக்கப்பட்டுள்ளார். அதனால் சூர்யகுமார் யாதவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

கேஎல் ராகுலுடன் சீனியர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் தொடக்க வீரராக ஆடுகிறார். 4ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடுகிறார்.

இந்திய அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், ஷர்துல் தாகூர், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

3 பார்மேட்டிலும் சதம்.. புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், 6வது இந்தியர் ஆனார்
Ind Vs SA: இந்திய அணி மிரட்டல் அடி..! இமாலய வெற்றி.. தொடரை கைப்பற்றி அசத்தல்..