India vs South Africa: முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்..! வாசிம் ஜாஃபரின் அதிரடி தேர்வு

Published : Jan 18, 2022, 10:37 PM IST
India vs South Africa: முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்..! வாசிம் ஜாஃபரின் அதிரடி தேர்வு

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை முன்னாள் டெஸ்ட் ஓபனர் வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ளார்.  

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான  3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என தென்னாப்பிரிக்கா வென்றது. அடுத்ததாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. ஜனவரி 19, 21, 23 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன.

முதல் ஒருநாள் போட்டி நாளை(ஜனவரி 19) நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர்.

கேஎல் ராகுலுடன் சீனியர் தொடக்க வீரர் ஷிகர் தவானை தேர்வு செய்துள்ளார் வாசிம் ஜாஃபர். 3ம் வரிசையில் கோலி, 4ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர், 5ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தேர்வு செய்துள்ளார் வாசிம் ஜாஃபர். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்.

ஸ்பின்னர்களாக ரவிச்சந்திரன் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரையும், ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக ஷர்துல் தாகூரையும், ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ராவுடன் புவனேஷ்வர் குமார் - முகமது சிராஜ் ஆகிய இருவரில் ஒருவரையும் தேர்வு செய்துள்ளார் வாசிம் ஜாஃபர்.

வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ள இந்திய அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாகூர், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார்/முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், பும்ரா.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?