சிறுவயது போட்டோவை பகிர்ந்து பாலிய நண்பன் வினோத் காம்ப்ளிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சச்சின்

Published : Jan 19, 2022, 03:57 PM ISTUpdated : Jan 19, 2022, 04:06 PM IST
சிறுவயது போட்டோவை பகிர்ந்து பாலிய நண்பன் வினோத் காம்ப்ளிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சச்சின்

சுருக்கம்

தனது பல்லாண்டு கால சிறுவயது நண்பனும் கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.  

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும், வினோத் காம்ப்ளியும் சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்கள். பள்ளிப்பருவத்திலிருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள். பால்ய நண்பர்களான இவர்கள், சிறுவயது முதல் ஒன்றாக கிரிக்கெட் ஆடியவர்கள்.

சச்சின் டெண்டுல்கர் - வினோத் காம்ப்ளி இணைந்து அடித்த 664 ரன்கள் தான் நீண்ட நாட்களாக பள்ளியளவில் ரெக்கார்டாக இருந்தது. ஒன்றாக வளர்ந்த இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் 7 ஆண்டுகள் ஒன்றாக இணைந்து கிரிக்கெட் ஆடினர். வினோத் காம்ப்ளிக்கு முன்பாகவே சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் அறிமுகமாகிவிட்டார்.

1991ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான வினோத் காம்ப்ளி, 2000ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் ஆடி முறையே 1084 மற்றும் 2477 ரன்கள் அடித்துள்ளார்.  

2000ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் வினோத் காம்ப்ளி ஆடவில்லை. சச்சினின் நெருங்கிய நண்பராக இருந்தாலும், அவரால் சச்சின் அளவிற்கு இந்திய அணியில் ஜொலிக்க முடியவில்லை. 

களத்திலும் களத்திற்கு வெளியேயும் இருவருக்கும் இடையே இருந்த நட்பு அனைவரையும் வியக்கவைத்தது. இன்றும் இருவருக்கு இடையேயான நட்பு தொடர்ந்துவருகிறது.

இந்நிலையில், வினோத் காம்ப்ளியின் பிறந்தநாளையொட்டி, இன்ஸ்டாகிராமில் வினோத் காம்ப்ளியுடன் தான் இருந்த சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். களத்திலும் களத்திற்கு வெளியேயும், என்றென்றும் நினைவில் இருக்கக்கூடிய நினைவுகளை நாம் பெற்றிருக்கிறோம். 50 வயதை எட்டிய அனுபவம் எப்படியிருக்கிறது என்று உன்னிடம் கேட்டுத்தெரிந்துகொள்ள விழைகிறேன் என்று சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA 1st T20: இந்தியா பேட்டிங்..! சஞ்சு சாம்சன், நம்பர் 1 ஸ்பின்னர் நீக்கம்! பிளேயிங் லெவன்!
ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி