சிக்சர்  மழை பொழிந்து   ரவுசு  காட்டிய ரஸல்…. சென்னை அணிக்கு 203 இலக்கு….

 
Published : Apr 10, 2018, 10:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:14 AM IST
சிக்சர்  மழை பொழிந்து   ரவுசு  காட்டிய ரஸல்…. சென்னை அணிக்கு 203 இலக்கு….

சுருக்கம்

russel sixer rain in chepak ground

கொல்கத்தா  அணியின்  ரஸல்  ஆட்ட நேர இறுதி வரை அவுட் ஆகாமல் 88 ரன்கள் குவித்தார். அவர் பறக்க விட்ட சிக்சர்கள் மைதானத்தை சூடாக்கியது.  கடைசி வரை நிலைத்து நின்று ரசல், 11 சிக்சர் 1 பவுண்டரி என மொத்தமாக 88 ரன்கள் அடித்து  பரபரப்பை ஏற்படுத்தினார். கேகேஆர் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. 

சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் கொல்கத்தா வீரர் ரசல், ரவுண்டுகட்டி சிக்சராக பறக்கவிட 20 ஓவரில் அந்த அணி 6 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. 



இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுகான தொடர் முக்கிய நகரங்களில் தற்போது நடக்கிறது. 

இதில் மேட்ச் பிக்சிங் சர்ச்சையில் சிக்கிய இரண்டு ஆண்டு தடைக்கு பின் மீண்டும் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல்., தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

இந்த போட்டியில் டாஸ்  வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு கிறிஸ் 22 ரன்களும், நரேன் 12 ரன்களும் எடுத்தனர்.  அடுத்து வந்த உத்தப்பா  29 ரன்கள் எடுத்திருந்த நிலையில்  ரெய்னாவின் சூப்பர் ரன் அவுட்டில் வெளியேறினார்.

அடுத்து வந்த ரசல் சிக்சராக பறக்கவிட்டார். கடைவரை நிலைத்து நின்ற ரசல், 11 சிக்சர் 1 பவுண்டரி என மொத்தமாக 88 ரன்கள் அடித்து கைகொடுக்க, கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!
T20 தரவரிசை.. டாப் 5-க்குள் சென்ற திலக் வர்மா.. பவுலிங், பேட்டிங்கில் இந்தியர்கள் நம்பர் 1