ரொனால்டோ, மெஸ்ஸியை ஓரங்கட்டிய இந்திய கால்பந்து வீரர் சுனீல் சேத்ரி…

Asianet News Tamil  
Published : Jun 17, 2017, 10:12 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
ரொனால்டோ, மெஸ்ஸியை ஓரங்கட்டிய இந்திய கால்பந்து வீரர் சுனீல் சேத்ரி…

சுருக்கம்

Ronaldo and messi defeated by strike rating by Indian footballer Suneel Sethri

சர்வதேச அளவில் தற்போது விளையாடி வரும் கால்பந்து வீரர்களில் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்டவர் என்ற பெருமையை இந்தியாவின் சுனீல் சேத்ரிக்கு பெற்றுள்ளார்.

கால்பந்து உலகின் தற்போது கொடி கட்டி பறக்கும் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஆர்ஜென்டீனாவின் லயோனல் மெஸ்ஸி ஆகியோரின் ஸ்டிரைக் ரேட்டை விட சுனீல் சேத்ரியின் ஸ்டிரைக் ரேட் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓர் ஆட்டத்தில் சுநீல் சேத்ரியின் கோல் விகிதம் 0.57.

அதேநேரத்தில் ரொனால்டோவின் கோல் விகிதம் 0.52, மெஸ்ஸியின் கோல் விகிதம் 0.49 ஆகும்.

இதுவரை 94 ஆட்டங்களில் விளையாடியுள்ள சுனீல் சேத்ரி, சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் நடைபெற்ற ஆசிய கோப்பைக்கான தகுதிச்சுற்றில் கிர்கிஸ்தானுக்கு எதிராக கோலடித்ததன் மூலம் சர்வதேசப் போட்டியில் தனது 54-ஆவது கோலைப் பதிவு செய்தார்.

தற்போது விளையாடி வரும் வீரர்களில் சர்வதேசப் போட்டியில் அதிக கோலடித்தவர்கள் வரிசையில் 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் சுனீல் சேத்ரி.

ரொனால்டோ 73 கோல் அடித்து முதலிடத்திலும்), மெஸ்ஸி 58 கோல் அடித்து 2-ஆவது இடத்திலும், கிளின்ட் டெம்ப்ஸி 56 கோல் அடித்து 3-ஆவது இடத்திலும்) உள்ளனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

எல்லை மீறி போறீங்க டா.. RCBக்கு எதிராக பஞ்சாயத்தை கூட்டிய CSK..! BCCIயிடம் முறையீடு..
CSK Replacement: கலீல் அவுட், CSK-க்கு அடுத்தது யார்? இந்த 3 பௌலர்கள் தான் லிஸ்ட்ல இருக்காங்க!